வாழ்வாதாரம் இல்லாத ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை
பதிவு : ஜூன் 26, 2020, 01:00 PM
புதுக்கோட்டையில், ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஆட்டோ ஸ்டாண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மச்சுவாடியை சேர்ந்த சுப்பிரமணியன், மனைவி மற்றும் மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் அவர்,  வங்கி கடன் மூலம், சொந்தமாக ஆட்டோ வாங்கி தவணை செலுத்தி வந்துள்ளார்.  பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ நிறுத்தத்தில், ஆட்டோ ஓட்டிய அவர், ஊரடங்கால், வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தார். கடந்த மாதம் ஆட்டோ ஓட்ட அனுமதி வழங்கிய நிலையில், மக்கள் நடமாட்டம் இன்றி வருவாய் இல்லை. இதனிடையே, வாங்கிய பணத்தை செலுத்துமாறு கடன் கொடுத்தவர்கள் அழுத்தம் கொடுத்து உள்ளனர். இதனால், மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணியன், ஆட்டோ நிறுத்தத்தில் தூக்கிட்டுள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் உடடினயாக மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் உயிரிழந்தார். இந்நிலையில், சக ஆட்டோ ஓட்டுநர்கள், தங்கள் குடும்பத்தினருடன், புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகாரளிக்க திரண்டதால் பரபரப்பு நிலவியது. 

தொடர்புடைய செய்திகள்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

141 views

பிற செய்திகள்

"பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது" - உதயநிதி ஸ்டாலின்

பெரியாருக்கு காவிச் சாயம் பூசியது கண்டனத்துக்குரியது என்றும் தைரியமான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

21 views

"பெரியார் சிலை அவமதிப்பு - கடும் நடவடிக்கை தேவை" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தந்தை பெரியார் சிலையை அவமதித்தோர் மீது கடும் நடவடிக்கை தேவை என, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

63 views

விவசாயிக மசோதாக்கள் விவகாரம்: "நிலைப்பாட்டை மாற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்" - கமல்ஹாசன் எச்சரிக்கை

விவசாய மசோதா தொடர்பான திருத்தங்களை ஏற்காவிட்டால் மக்கள் திருத்துவார்கள் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கூறியுள்ளார்.

7 views

பெரியார் சிலை அவமதிப்பு : "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" - வைகோ கண்டனம்

திருச்சி அருகே பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ "அக்கிரமக்காரர்களை கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தி உள்ளார்.

35 views

"முடிந்தால் திமுக ஆட்சியில் பெரியாரை தொட்டுப்பாருங்கள்" - திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சவால்

திருச்சி இனாம் குளத்தூரில் அவமதிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு, திமுக முதன்மைச் செயலாளர் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

1322 views

பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி - சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

223 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.