ஆன்லைன் வகுப்பு நடத்தும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா?- சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
பதிவு : ஜூன் 23, 2020, 06:24 PM
ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் தனியார் பள்ளிகள், அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆன் லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் தனியார் பள்ளிகள், அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்க தடை விதித்த உத்தரவை எதிர்த்த வழக்கு, நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது.  அப்போது, பேரிடர் மேலாண்மைக்காக மட்டுமே பேரிடர் மேலாண்மை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டத்தின் கீழ் கட்டணம் வசூலிக்க தடை விதித்தது தவறு என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. 
இதையடுத்து, ஆன்லைன் மூலம் வகுப்புக்களை நடத்தும்படி ஆசிரியர்களை வற்புறுத்தும் போது, அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டாமா? என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்குகள் தொடர்பாக, ஜூன் 30 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார்.

பிற செய்திகள்

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் பிளாஸ்மா தெரபி மூலம் கொரோனா சிகிச்சை அளிக்க தகுதியானவர்கள் முன்வந்து பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

18 views

மதிப்பூதியம் ரத்து - அரசாணை வெளியீடு

சிறப்பாக பணியாற்றும் அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

281 views

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொல்லப்பட்ட வழக்கு - வழக்கின் ஆவணங்கள், பொருட்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டதை அடுத்து, டெல்லியில் இருந்து வருகை தந்த சிபிஐ அதிகாரிகள், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகம் சென்றனர்.

20 views

மணல் திருட்டால் பள்ளமாகிய கண்மாய் - மணல் வாகனங்கள் தடுத்தி நிறுத்தி இளைஞர்கள் போராட்டம்

மணல் திருட்டால் கண்மாய் பள்ளமாகி வயல் காடுகள் மேடானதால் வேதனையடைந்த இளைஞர்கள் மணல் வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர்.

52 views

உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லையா? - தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

34 views

கொடிவேரி தடுப்பணையை ஆய்வு செய்த அமைச்சர் - சுற்றுலா தலமாக்கும் பணிகள் குறித்து ஆலோசனை

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்கும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.