மக்களை குழப்பாதீர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினுக்கு கண்டனம்
பதிவு : ஜூன் 23, 2020, 04:46 PM
முதலமைச்சர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் அளித்துள்ளார்.
முதலமைச்சர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் அளித்துள்ளார். 

* இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஏதாவது ஒரு நல்ல ஆலோசனையை, ஸ்டாலின் வெளியிட்டுள்ளாரா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

* அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, அரசை குற்றம் சுமத்தி திமுக தலைவர் அறிக்கை வெளியிட்டு வருவதாக, குறிப்பிட்டுள்ளார். 

* கொரோனாவை ஒழிக்க இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், இறைவனுக்கு தான் தெரியும் என முதலமைச்சர் பதில் அளித்ததில் என்ன தவறு இருக்கிறது? என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். 

* முதலமைச்சர் தெய்வ பக்தி உள்ளவர் என்றும், கடவுள் பெயரை சொன்னாலே கோபம் கொள்ளும் ஸ்டாலினின் வெளிப்பாடு தான், அவரது அறிக்கையில் தெரிவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

* விமானம் மற்றும் ரயில்களில் வந்த பயணிகள் மீதும், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மீதும் முதலமைச்சர் பழி போட்டதாக ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல என்று தெரிவித்துள்ள ராஜேந்திரபாலாஜி,

* இந்த நோய் தமிழகத்தில் உருவானது அல்ல என அனைவருக்கும் தெரியும் என்றும், எனவே முதலமைச்சர் பற்றி அவதூறாக கருத்து வெளியிடுவது கண்டனத்திற்குரியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* ஏதோ அதிமுக அரசு தான், கொரோனாவை தோற்றுவித்தது போல தினந்தோறும் அறிக்கை வெளியிட்டு மக்களை குழப்புவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும்,

* தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பது போல் ஸ்டாலினின் அறிக்கை இருப்பதாகவும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1075 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

226 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

219 views

பிற செய்திகள்

உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் வேலுமணி உத்தரவு

ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனோ தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

0 views

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 15ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

7 views

"திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

திருப்போரூர் சம்பவத்தை, எம்.எல்.ஏ. இதயவர்மன் தனது சொந்த நலனுக்காக செய்தது போல அமைச்சர் ஜெயக்குமார் சித்தரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

353 views

"தேர்தல் நடத்தும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" - தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

731 views

குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்ட திட்டம் : பழைய வீடுகளை காலி செய்ய சொன்னதால் போராட்டம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு, சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் குடிசை மாற்று வாரியத்துக்கு புதிய வீடுகள் கட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

14 views

3 பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கு அழைப்பு : தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, முதலமைச்சர் கடிதம்

மூன்று முன்னணி பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.