கட்டிய மனைவியை கொலை செய்த கணவன் - பதற வைக்கும் வாக்குமூலம்
பதிவு : ஜூன் 23, 2020, 02:24 PM
நூறு சவரன் நகையுடன் திருமணம் செய்த மனைவி மீது, பாம்பை ஏவி கொலை செய்தது ஏன் என கணவன் அளித்துள்ள வாக்குமூலம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் என்ற பகுதியைச் சேர்ந்த சூரஜ்க்கும், உத்ரா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. 96 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு சொகுசுக் கார் ஆகிய சீர்வரிசையுடன் திருமணம் செய்து வந்த உத்ராவுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. மகிழ்ச்சியான வாழ்வின் நடுவே, 2-வது முறையாக பாம்பு கடித்து உத்ரா உயிரிழந்தார். பலரும் அனுதாபம் தெரிவித்த நிலையில், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக, அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சூரஜ் அளித்த வாக்குமூலம் பதற வைத்துள்ளது. 

வங்கி பெட்டகத்தில் இருந்த நகைகளை ஊதாரித்தனமாக செலவு செய்தும், கூடுதல் வரதட்சனை கேட்டும் துன்புறுத்தி உள்ளனர். இதனால், அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்ற உத்ரா, விவகாரத்து கோரியுள்ளார். வரதட்சணையை திருப்பி கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுமே என யோசித்த கணவன் சூரஜ், தனது மனைவியை தீர்த்துக் கட்டியுள்ளார். மரணம் இயற்கையாக இருக்க வேண்டும் என முடிவு செய்த அவர், முதல் முறை அணலி வகை பாம்பை ஏவியபோது, சிகிச்சையால் உத்ரா உயிர்பிழைத்தார். எனினும் 2-வது முறையாக கருநாகப் பாம்பை வாங்கி வந்த அவர், பழச்சாறில் தூக்க மாத்திரை கலந்துகொடுத்து பின்னர், பாம்பை மனைவி மீது வீசி கொத்த வைத்துள்ளார். 
   
தமது கொலை அரங்கேற்றத்தை கூறிய அவர், வீட்டின் அருகே புதைத்து வைத்திருந்த நகைகளையும் போலீசார் மீட்டனர். இந்த விவகாரத்தில், பாம்பை கொடுத்த நண்பன் சுரேஷ், ஜூரஜ் மற்றும் அவரது தந்தை ஆகியோர் சிறையில் உள்ளனர். வரதட்சணைக்காக கட்டிய மனைவியை, பாம்பை ஏவி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

601 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

156 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

மத்தியப் பிரதேசத்தில் சோலார் பூங்கா துவக்கம் - பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவாவில் அமைக்கப்பட்டு உள்ள 750 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

20 views

"போலீசாரின் என்கவுன்ட்டரில் விகாஸ் துபே மரணம் : தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டனர்" - உத்தர பிரதேச காவல் படை சிறப்பு அதிகாரி

போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயன்றதாகவும், தற்காப்புக்காக போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் உத்தர பிரதேசத்தின் காவல் படை சிறப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

647 views

விபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்பி செல்ல முயற்சி - பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

உத்தர பிரதேசத்தில் 8 போலீசாரை கொன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டான்.

295 views

தமிழகம் உள்பட 8 மாநிலங்களின் தொற்று மட்டும் 90% - மத்திய சுகாதாரத் துறை புள்ளி விவர தகவல்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று எண்ணிக்கை மட்டும் 90 சதவிகிதம் என மத்திய, சுகாதாரத் துறை கூறியுள்ளது.

111 views

30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கு - சரத்தை காவலில் எடுத்த சுங்கத்துறை அதிகாரிகள்

கேரளாவில், 30 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சுங்கத்துறையினர், அவரை 7 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

20 views

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு விவகாரம் - பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதவுள்ள பஞ்சாப் முதல்வர்

பஞ்சாப்பில் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவது மிகவும் கடினம் என அம்மாநில முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.

117 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.