மருத்துவ படிப்புகளில் 50 % இடஒதுக்கீடு - ஜூலை 9 ஆம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
பதிவு : ஜூன் 22, 2020, 10:27 PM
மருத்துவ மேற் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்குகளின் விசாரணையை ஜூலை 9 தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது
முதுநிலை மருத்துவ படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத ஒதுக்கீடு கோரி திமுக, அதிமுக, மதிமுக, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகளும், தமிழக அரசு சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.
மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த  வழக்கறிஞர்  ராஜகோபால், 27 சதவீத இடஒதுக்கீடு கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதால், இந்த  வழக்குகளை  தள்ளிவைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஜூலை 9 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

பிற செய்திகள்

"சாத்தான்குளம் சம்பவம்-குற்றவாளிகளுக்கு மரண தண்டனை" - பொன்.ராதாகிருஷ்ணன்

சாத்தான்குளம் சம்பவம் மற்றும் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

722 views

சென்னையில் கொரோனா உயிரிழப்பு ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டியது .

22 views

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

தமிழகத்தில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது. இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

17 views

என்எல்சி விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

கடலூர் மாவட்டம் என்எல்சி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

21 views

போர்வீரர்கள் மத்தியில் திருக்குறள் விளக்கம் - பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி

இந்திய- சீன எல்லையில், லடாக்கில் ராணுவ வீரர்களிடம் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசியதற்கு பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார்.

859 views

"காவல்துறையையும், தமிழக அரசையும் திமுக தலைவர் ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சிக்கிறார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சாத்தான்குளம் விவகாரத்தில் அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்துவரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் தரம் தாழ்ந்து விமர்சிப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

268 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.