பெங்களூருவில் மீண்டும் முழு ஊரடங்கு கிடையாது - முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
பதிவு : ஜூன் 22, 2020, 06:18 PM
பெங்களூரில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பெங்களூரில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில், கர்நாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொற்றினை கட்டுப்படுத்துவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், வெளிமாநிலத்தில் இருந்து  வரும் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்துவது கட்டாயமாக்கப்படுவதாக அறிவித்தார். பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை கடுமையாக்கவும், வீட்டு தனிமையில் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் முடிவு செய்யப்பட்டது. பெங்களூர் நகரில் தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு கொண்டுவரப்படுமோ என  கேள்வி எழுந்துள்ள நிலையில் அதற்கு வாய்ப்பே இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரஷ்யாவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த கொரோனா தடுப்பூ​சி - மாஸ்கோ மாநகர மேயர் செர்ஜி சோபியானின் தகவல்

ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் V, பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

1267 views

திருச்சியில் பெருகி வரும் பெருந்தொற்று நோய் - அரசு கல்லூரி கொரோனா மையமாக மாற்றம்

திருச்சியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அரசு பொறியியல் கல்லூரி கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது.

1169 views

கேரளாவில் கொரோனாவுக்கு 1 லட்சத்து 35,117 பேர் பாதிப்பு - முதல்முறையாக மருத்துவர் பலி

கேரளாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார்.

118 views

பிற செய்திகள்

பிரதமருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று, பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

10 views

4 ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு பிரதமர் பயணம்: பிரதமரின் பயணச் செலவு ரூ.517.82 கோடி - மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை தகவல்

58 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்ய 2015 முதல்2019 நவம்பர் வரை 517 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ளது.

8 views

"வாரா கடன்களை நிர்வாகம் செய்ய தனி வங்கி உருவாக்க வேண்டும்" - ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் தகவல்

தேர்ந்தெடுக்கப்பட்ட சில பொதுத் துறை வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

102 views

கல்லூரி, பல்கலைக் கழகங்களில் முதலாமாண்டு வகுப்பு: நவம்பர் 1 முதல் தொடங்கலாம் - மத்திய அரசு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் முதலாண்டு வகுப்புகளை தொடங்க ஏதுவாக கால அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.

538 views

ஸ்வப்னா சுரேஷூக்கு 4 நாட்கள் என்ஐஏ காவல்

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேஷூக்கு 4 நாட்கள் என்ஐஏ காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8 views

இந்திய கலாசார மற்றும் பரிணாம வளர்ச்சி ஆய்வுக்குழு: "தென்னிந்தியர்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்" - திமுக எம்.பி. திருச்சி சிவா கோரிக்கை

இந்திய கலாசாரம் மற்றும் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வுக்குழுவில் தென்னிந்தியர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்று திமுக எம்.பி. திருச்சி சிவா மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.