கொரோனாவுக்கு எதிராக வென்ற தாராவி - பாதிக்கப்பட்டோர் சதவீதம் 1 ஆக குறைந்தது
பதிவு : ஜூன் 22, 2020, 04:51 PM
கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் மும்பை குடிசை பகுதியான தாராவி சத்தமே இல்லாமல் வென்றுள்ளதாக மும்பை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவியில் ஏப்ரல் மாத தொடக்கத்தில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மக்கள்  நெருக்கம் அதிகம் என்பதால் வேகமான பரவத் தொடங்கியது. 10க்கு 10 என்கிற அறைக்குள் 5 முதல்7 பேர் வரை வசிக்கும் நெருக்கடியான குடியிருப்பில், மிகப்பெரிய பேராயம் ஏற்படும் என உணர்ந்த மும்பை மாநகராட்சி, தாராவியை வெளி உலகில் இருந்து தனிமைப்படுத்தியது.  தொற்று வேகம் 12 சதவீதமாக அதிகரித்த நிலையில், அனைவரையும் வீடுகளில் முடக்கியதுடன், ஒவ்வொரு வீடாக சோதனையும், நான்கு முதல் 5 அடுக்கு தொடர்புகளும் பரிசோதனைக்கு கொண்டுவரப்பட்டன. மொத்தம் 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு சோதனை செய்யப்பட்டதுடன், 350 தனியார் மருத்துவமனைகள், பயிற்சி மையங்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இப்படியான தீவிர நடவடிக்கைகளால் மே மாதத்தில் 4 புள்ளி 3 சதவிதமாக குறைந்த, தொற்று  தற்போது 1 சதவீதம் என்கிற அளவில் குறைக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் 43 பேர் மட்டுமெ பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜூன் மூன்றாவது வாரத்தில் 19 பேராக குறைந்துள்ளது. வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலையில், இந்தியாவுக்கே தாராவி முன்னுதாரணமாகி உள்ளது. மகாராஷ்டிராவுக்கும், மும்பை மாநகராட்சிக்கு மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சென்னை போன்ற பெருநகரங்களில் இந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே மக்களின்  எதிர்பார்ப்பாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சூர்யாபேட்டை பேருந்து நிலையம் அருகே - விரைவில் கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலை

இந்திய-சீன எல்லைப் போரில் வீர மரணம் அடைந்த கர்னல் சந்தோஷ் பாபு உருவச் சிலையை நிறுவ தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

75 views

திருவள்ளூர் : மகப்பேறு பிரிவில் பெண் ஒருவருக்கு கொரோனா

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் சிசேரியன் செய்யப்பட்ட ஒரு பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 views

பிற செய்திகள்

எல்லையில் அமைதியை நிலைநாட்ட உடன்பாடு - இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள முடிவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதல் சம்பவம் எதிரொலியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி Wang YI உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

505 views

"கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது" - பல்வேறு நாடுகளை சார்ந்த விஞ்ஞானிகள் தகவல்

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவக்கூடியது என்றும் விதிமுறைகளை மாற்ற கோரி, உலக சுகாதார மையத்திற்கு விஞ்ஞானிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

720 views

வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் மீண்டும் பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுக்க தொடங்கியுள்ளன.

10 views

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு - 24,248

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

15 views

"உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவதில் பாரபட்சம்" - வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை பட்டியலிடுவதில் பதிவாளர் அலுவலகம் பாரபட்சம் மற்றும் சலுகை காட்டுவதாகக் கூறி ரீபக் கன்சால் தொடர்ந்த வழக்கைஉச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

5 views

தலாய் லாமாவின் 85வது பிறந்தநாள் - பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து

பௌத்த துறவியான தலாய் லாமாவின் 85 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு உலகின் பல்வேறு தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.