சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாட்டம்
பதிவு : ஜூன் 21, 2020, 04:35 PM
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.

நெல்லிக்காய்கள் மீது அமர்ந்து யோகா - மாணவிகள் சாதனை



நெல்லிக்காய்கள் மீது அமர்ந்து யோகாசனம் செய்து திருச்சியில் இரு பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். 7ஆம் வகுப்பு மாணவி சுகித்தா என்பவர் நெல்லிக்காய்கள் மீது அமர்ந்தபடி 21 நிமிடம் தொடர்ச்சியாக கண்களை மூடி பத்மாசனத்தில் அமர்ந்து சாதனை நிகழ்த்தினார். இதேபோல், 6ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா தேவி, நெல்லிக்காய்கள் மீது அமர்ந்தபடி பத்மாசனம், சிவலிங்காசனம் உள்ளிட்ட பல்வேறு ஆசனங்களை செய்துகாட்டினார். பதஞ்சலி  புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்ற இந்த சாதனைக்காக, இரு மாணவிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

கடற்கரையில் யோகா செய்த இரட்டை சகோதரிகள்



சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தீதிக்ஷா, திரிநேத்ரா என்ற  10 வயது இரட்டை சகோதரிகள் பலவித யோகாசனங்களை செய்தனர். 

தூய்மை பணியாளர்களுக்கு யோகா பயிற்சி



சர்வதேச யோகா தினத்தையொட்டி, அரியலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு   யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, திரிகோண ஆசனம், உட்கட்டாசனம் உள்ளிட்ட 16 வகையான ஆசனங்களை அவர்கள் செய்தனர். 

காணொலி காட்சி மூலம் யோகாசன பயிற்சி

நெல்லையில் காணொலி காட்சி மூலம் உலக யோகா தின நிகழ்வுகள் நடைபெற்றன. நெல்லை அறிவியல் மையத்தில் உள்ள அரங்கில் 6 பேர் இணைந்து யோகாசனங்களை செய்தனர். அதனை, பேஸ்புக், டிவிட்டர், யூ டியூப் மூலம் ஒளிபரப்பி, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே ஆசனங்களை செய்ய வழி வகை செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

451 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

110 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

44 views

பிற செய்திகள்

"கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டுத் தர வேண்டும்" - அடகு கடை முன் அழுது ஆர்ப்பாட்டம் செய்த மக்கள்

மதுரையில் அடகு கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீட்டு தரக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

39 views

முழு ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்ட விசைத்தறி கூடங்கள் - தலா ரூ.1000 அபராதம் விதித்த நகராட்சி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இயக்கி வந்த விசைத்தறி கூடங்களின் சாவிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

11 views

காலை 6 முதல் மாலை 6 வரை கடைகள் செயல்பட அனுமதி - வணிகர் சங்க கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் செயல்படும் நேரத்தை மதியம் 2 மணியாக குறைத்து ஆட்சியர் அறிவித்திருந்தார்.

40 views

கட்டுமான பொருட்கள் 30 சதவீதம் விலை உயர்வு - மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் கட்டுமான பொருட்கள் விலை உயர்வு காரணமாக கட்டுமான தொழில்கள் முடங்கி உள்ளன.

5 views

20 சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிப்பு - கொரோனா பரவலை கட்டுப்படுத்த போலீஸ் தீவிரம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகர் பகுதியில் 20 சோதனை சாவடிகளை அமைத்து தீவிர சோதனை நடைபெறுகிறது.

64 views

கொரோனா பாதிப்பு : "தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைவு" - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்

கொரானா தொற்று பாதிப்பை பொருத்தவரை தமிழகத்தில் இறப்பு சதவீதம் மிக குறைவாக உள்ளதாக அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.