கடலில் மிதந்து வந்த ரூ.117 கோடி மதிப்பிலான போதைப் பொருள் மீட்பு
பதிவு : ஜூன் 21, 2020, 03:56 PM
மாமல்லபுரம் அருகே கடலில் இருந்து 117 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் சீலிடப்பட்ட தகர டிரம் ஒன்று மிதந்த நிலையில் கரை ஒதுங்கியது. 

* எண்ணெய் அல்லது டீசல் இருக்கலாம் என நினைத்து அவற்றை பிரித்து பார்த்த போது ரீபைண்ட் சைனீஸ் டீ என அச்சிடப்பட்ட பொட்டலங்கள் இருந்தன. 

* இதனை பார்த்த மீனவர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள், அவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

* சென்னையில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை செய்ததில் அது மெத்தாம்பிடைமின் என்ற போதைப் பொருள் என தெரியவந்தது. 

* இதனால் போலீசார் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். கைப்பற்றப்பட்ட 78 கிலோ கொண்ட அந்த போதைப்  பொருளின் மதிப்பு மட்டும் 11 கோடி ரூபாய் என்கின்றனர். 

* மலேசியா, இந்தோனேஷியா, வியட்நாம் உள்ளிட்ட இடங்களில் இந்த வகையான போதைப் பொருளை சட்டவிரோதமாக தயாரிப்பதாகவும், கடல் வழியாக கடத்த முயன்ற போது கடலோர காவல் படை போலீசாருக்கு பயந்து அதனை கடலில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. 

* போதைப்  பொருள் கைப்பற்றப்பட்ட நிலையில் கடத்தலில் ஈடுபட்டது யார்? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

821 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

190 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

160 views

பிற செய்திகள்

"கள்ளத்துப்பாக்கி மூலம் ஒரு எம்.எல்.ஏ. சுட்டது ஏற்க முடியாது" - அமைச்சர் ஜெயக்குமார்

திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தனது கடமையை செய்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

847 views

தமிழகத்தில் மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் ஏறுமுகத்தை அடைந்துள்ளது.

41 views

பரோட்டாவுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டவர் கைது

சாப்பாட்டுக்கு ஆசைப்பட்டு போலீஸ் வேஷம் போட்டு சிக்கியவரின் கதையை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

39 views

மதுரை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார் சுஜித் குமார்

மதுரை மாவட்டத்தில், குழந்தை திருமணங்கள், பெண் சிசு கொலை உள்ளிட்டவற்றை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்தார்.

17 views

இன்று பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாள் - 2 முறை தேசிய விருது பெற்றவர்

காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ஆம் ஆண்டு பிறந்த நா.முத்துக்குமார், தந்தையின் இலக்கிய ஆர்வத்தால் சிறு வயதில் இருந்தே படிப்பதிலும், எழுதுவதிலும் நாட்டம் கொண்டிருந்தார்.

350 views

குடியாத்தம் : மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஆந்திர மாநில வனப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான மோர்தனா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.