சர்வதேச தந்தையர் தினம் - ஆண் தேவதைகளை கொண்டாடும் ஒரு தினம் இன்று...
பதிவு : ஜூன் 21, 2020, 07:41 AM
கவலைகளை பிள்ளைகளின் சிரிப்பில் கரைக்கும் அப்பாக்கள்...
அப்பாக்களை கொண்டாட ஒரு தினம் அதுவும் இன்று... அன்னையர் தினம், சகோதரிகள் தினம் போல இதுவும் ஒரு தினம் தானே என நிச்சயமாக நம்மால் கடந்து போக முடியாது. காரணம் குடும்பத்தின் நலனுக்காக மெழுகாய் தன்னை கரைத்துக் கொள்ளும் தியாக உருவமாக இருப்பவர்களை கொண்டாடி தீர்க்க வேண்டிய தினம் இது.... குழந்தைகளை கண்ணும் கருத்துமாய் தாய் வளர்த்தாலும் கூட, அவர்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்து கொடுக்கும் பிதாமகர்களே அப்பாக்கள். 1909 ஆம் ஆண்டு முதல் தந்தையர் தினம் கொண்டாடும் பழக்கம் இருந்தாலும் கூட, இந்தியாவில் சமீப காலமாக தந்தையர் தின கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. பெண் குழந்தைகளின் முதல் ஹீரோவே அப்பாக்கள் என சொல்லும் அளவுக்கு பாசத்தாலும், கண்டிப்பாலும் பிள்ளைகளை வளர்க்கும் அப்பாக்கள் அதிகம்... தங்கள் கண்ணீரையும் கவலைகளையும் பிள்ளைகளின் சிரிப்பில் கரைத்துவிட்டு அடுத்த வேலைகளை கவனிக்க சென்று விடுவார்கள்... தான் பட்ட துன்பமெல்லாம் தன்னோடு போகட்டும், தன் பிள்ளை நல்ல இடத்தை அடைய வேண்டும் என மெழுகாக தன்னை உருக்கி ஒளி கொடுக்கும் தியாக ஜீவன்கள் அப்பாக்களே... தன் தந்தையின் முழு பாசத்தையும், அன்பையும் தான் தந்தையாகும் போது தான் ஒருவன் உணர்கிறான். ஏனெனில் புத்தனாயிருப்பது எல்லாருக்கும் எளிது...  ஆனால் பொறுப்பான அப்பாவாக இருப்பது தான் கடினம். தந்தையர்களை கொண்டாடும் இந்த நாளில் நாமும் பொறுப்பானவர்களாக இருந்து அடுத்த தலைமுறையை வழிநடத்துவோம்... 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1081 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

227 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

219 views

பிற செய்திகள்

விமான சேவை சார்ந்த 30 லட்சம் பேர் வேலை இழப்பு - ஆசிய அளவில் விமான துறையில் ரூ.2.20 லட்சம் கோடி இழப்பு

இந்திய விமான துறையை சார்ந்திருக்கும் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

59 views

பசுமை ரயில்வே என்ற இலக்கை நோக்கி செல்லும் ரயில்வே துறை : 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டம்

அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு, கர்நாடகா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

8 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் : அமைச்சர், அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் பேச்சு

ஆந்திர மாநிலம் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : அதிகாரிகளுடன் கர்நாடக முதலமைச்சர் ஆலோசனை

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையத் தொடங்கி உள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

7 views

"டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும்" : துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

13 views

"வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து தொகுப்பு" : ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, தேவையான அனைத்து மருந்து மாத்திரைகளுடன் கூடிய தொகுப்பை இலவசமாக வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.