உடுமலை சங்கர் கொலை வழக்கு - நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்
பதிவு : ஜூன் 21, 2020, 07:26 AM
உடுமலைபேட்டை சங்கர் கொலை வழக்கில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் நாளை வழங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கவுசல்யாவின் பெற்றோர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில்,  கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி  கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,  படுகாயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த, திருப்பூர் நீதிமன்றம், கெளசல்யாவின் தந்தை உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், கவுசல்யாவின் தாய் உள்பட இருவர் விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

606 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

158 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

95 views

பிற செய்திகள்

உழைத்த மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க நிதி இல்லையா? - தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

ஓய்வு பெற்ற மருத்துவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியத்தை ரத்து செய்யும் முடிவினை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 views

கொடிவேரி தடுப்பணையை ஆய்வு செய்த அமைச்சர் - சுற்றுலா தலமாக்கும் பணிகள் குறித்து ஆலோசனை

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணை நீர்வீழ்ச்சியை சுற்றுலா தலமாக்கும் பணியை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

2 views

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் - எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

55 views

செல்லூர் ராஜூ விரைவில் பூரண குணமடைய துணை முதலமைச்சர் விருப்பம்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விரைவில் பூரண குணமடைந்து மக்கள் பணியைத் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

54 views

சென்னையில் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் - 11,120 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

மருத்துவ முகாம் மூலம் மட்டும் 11 ஆயிரத்து 120 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

139 views

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 அறிவுரைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி பத்து அறிவுரைகளை வழங்கி உள்ளது.

199 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.