"கிணற்றை காணவில்லை காமெடி போல ஏரி நீரை காணவில்லை" - மாநகராட்சி நிர்வாகத்துக்கு கிருஷ்ணகிரி எம்.பி கேள்வி
பதிவு : ஜூன் 20, 2020, 09:45 PM
கிணற்றை காணவில்லை என்கிற வடிவேல் காமெடி போல, ஏரியில் நீரை காணவில்லை என கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒசூர் ராமநாயக்கன் ஏரியில், கெலவரப்பள்ளி அணையின் நீரை நிரப்ப மாநகராட்சி நிர்வாகம், சுமார் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்தும், ஏரியில் நீர் நிரம்பவில்லை என கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர்,  2019 ஆம் ஆண்டில், கெலவரப்பள்ளி அணையில் இருந்து ராமநாயக்கன் ஏரிக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து தண்ணீர் நிரப்பி உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டினார். ஒரு நாள் மட்டுமே  தண்ணீர் கொண்டுவரப்பட்ட நிலையில், ஒரு கோடி செலவு செய்து  நிரப்பியதாக மாநகராட்சி தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ஏரியில் நிரப்பியதாக கூறப்படும் தண்ணீர் எங்கே சென்றது? அதை திருடி சென்றது யார் என என கேள்வி எழுப்பினார். கிணற்றை காணவில்லை என்கிற வடிவேல் காமெடிபோல ஏரி நீரை காணவில்லை என கூறிய செல்லகுமார், ஒசூர் மாநராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியம், தமிழக அரசு  ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1081 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

227 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

219 views

பிற செய்திகள்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

10 views

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம்

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு வரும் 15ம் தேதி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.

9 views

"திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தை திசை திருப்ப வேண்டாம்" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

திருப்போரூர் சம்பவத்தை, எம்.எல்.ஏ. இதயவர்மன் தனது சொந்த நலனுக்காக செய்தது போல அமைச்சர் ஜெயக்குமார் சித்தரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

371 views

"ரியல் எஸ்டேட் அதிபர் தரப்பு ரவுடிகளை கைது செய்க" : திருப்போரூர் சம்பவம் - செங்காடு கிராம மக்கள் போராட்டம்

திருப்போரூர் சம்பவத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமார் தரப்பு ரவுடி கும்பலை கைது செய்ய வலியுறுத்தி செங்காடு கிராம மக்கள் திருப்போரூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

121 views

சாத்தான்குளம் சம்பவம்: சிபிஐ மனு மீது நாளை காலை 11 மணிக்கு விசாரணை - நீதிமன்றம்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பை கொலை வழக்காக மாற்றி சிபிஐ பதிவு செய்துள்ளது.

43 views

"தேர்தல் நடத்தும் சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்" - தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தேர்தல் நடத்தும் சட்டங்களில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்களை திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

748 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.