இந்தியாவுக்கு வர்த்தக முன்னுரிமை - அமெரிக்க அரசு மீண்டும் பரிசீலனை
பதிவு : ஜூன் 20, 2020, 08:01 PM
இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும் ஜிஎஸ்பி சலுகையை மீண்டும் வழங்குவது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக கூறி, இந்திய பொருட்களுக்கு அளித்து வந்த ஏற்றுமதி சலுகையை அமெரிக்கா நிறுத்தியது.

* இந்த நிலையில், தற்போது அந்த சலுகையை இந்தியாவுக்கு திரும்ப அளிப்பதற்காக அமெரிக்கா  பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* அதே நேரத்தில், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு, அமெரிக்கா பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைதிஸர் கூறுகையில், இந்தியாவுடனான வர்த்தகம் தொடர்பாக பேச்சு நடத்தப்படுவதாகவும், தாராள வர்த்தக பரிவர்த்தனை மேற்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

* அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும், ஆப்பிள், பாதாம், பருப்பு வகைகளுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

"அந்நிய சக்திகளிடம் இந்தியா ஒருபோதும் தலைகுனியாது" - பிரதமர் மோடி

கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்களுடனான மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.

389 views

கராச்சி பங்கு சந்தையில் தீவிரவாதிகள் தாக்குதலில் 4 பேர் பலி - தாக்குதல் குறித்து பாக். வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து

பாகிஸ்தான் பங்கு சந்தை தாக்குதல் தொடர்பாக இந்தியாவை தொடர்புபடுத்தி அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி தெரிவித்த கருத்துக்கள் அபத்தமானது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

155 views

ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் இணைந்த தருணம் - டிரம்ப் -க்கு எதிரான போராட்டத்தில் சுவாரஸ்யம்

அமெரிக்க அதிபர் டிரம்பை கண்டித்து அந்நாட்டில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

67 views

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு - 24,248

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24 ஆயிரத்து 248 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

25 views

பிற செய்திகள்

முதல்முறையாக முக கவசம் அணிந்தார் அமெ. அதிபர் டிரம்ப்

அமெரிக்கா அதிபர் டிரம்ப், முதல்முறையாக பொதுவெளியில் முககவசம் அணிந்து வந்தார்.

98 views

கொரோனாவை கட்டுப்படுத்த ஆக்ரோஷமான நடவடிக்கை தேவை - உலக நாடுகளுக்கு டெட்ரோஸ் அறிவுரை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதித்தோர் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 53 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

97 views

கடலுக்கு அடியில் அருங்காட்சியம் திறப்பு

இலங்கையில் கடற்படையினரால் கடலுக்கு அடியில் இரண்டாவது அருங்காட்சியம் திறக்கப்பட்டுள்ளது.

42 views

சிங்கப்பூர் நாடாளுமன்ற தேர்தல் - ஆளுங்கட்சி வெற்றி

சிங்கப்பூரில் கொரோனா அச்சுறுத்தலை மீறி நேற்று நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ஆளுங்கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ளது.

200 views

தென் கொரியாவில் டிரோன்களை பயன்படுத்தி கொரோனா விழிப்புணர்வு

தென் கொரியாவில் சுகாதார துறை அதிகாரிகள் டிரோனில் விளக்குகளை பொறுத்தி அவற்றை ஆகாயத்தில் பறக்கவிட்டு கொரோனா பரவலை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

25 views

(09.07.2020) உலகச் செய்திகள்

பைரேட்ஸ் ஆப் கரீபியன் படத்தில் நடித்து உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகர் ஜானி டெப், லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.