பொருளாதார வளர்ச்சி உடன் கூடிய எதிர்கால​ம் : தொழில் அதிபர்களுக்கு பிரதமர் அறைகூவல்
பதிவு : ஜூன் 02, 2020, 06:49 PM
பொருளாதார வளர்ச்சி உடன் கூடிய எதிர்காலத்தை படைக்க, தொழில் அதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தின் முதல் அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்த அழைப்பை விடுத்துள்ளார். 125 ஆண்டுக்கால வரலாற்றில் இந்திய தொழில் கூட்டமைப்பு பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளதை சுட்டிக்காட்டிய பிரதமர், கொரோனாவால் ஏற்பட்டுள்ள தேக்க நிலையில் இருந்து நாடு மீண்டும் மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார். 

இந்திய தொழில் அதிபர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் மீது தமக்கு அதிக நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை பட்டியலிட்ட பிரதமர், அவை நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பான துறைகள் என புகழாரம் சூட்டியுள்ளார். 

விவசாயிகள் பயன்பெறும் வகையில்  வேளாண் துறையில் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விவசாயிகள் தாங்கள் விரும்பும் இடத்தில் விளைபொருட்களை விற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். ஆன்லைன் மூலமாகவும் விளை பொருட்களை விற்க அரசு உதவி செய்யும் என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காலத்தில் 53 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மக்களுக்கு நிவாரண உதவி வழங்கி உள்ளதாகவும், 74 கோடி பேருக்கு உணவு தானியம் அரசு வழங்கி உள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார். 

தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். சுயசார்பு பாரதம் என்பது உலக நாடுகளின் பொருளாதாரத்தோடு ஒருங்கிணைந்து இருப்பது மட்டுமின்றி ஆதரவாகவும் இருப்பது என்றும் குறிப்பிட்ட பிரதமர், பாரதத்தை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற  அனைவரும் உறுதி ஏற்க அறைகூவல் விடுத்துள்ளார்.

பிற செய்திகள்

விமான சேவை சார்ந்த 30 லட்சம் பேர் வேலை இழப்பு - ஆசிய அளவில் விமான துறையில் ரூ.2.20 லட்சம் கோடி இழப்பு

இந்திய விமான துறையை சார்ந்திருக்கும் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

80 views

பசுமை ரயில்வே என்ற இலக்கை நோக்கி செல்லும் ரயில்வே துறை : 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டம்

அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு, கர்நாடகா,குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில், 200 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளை நிறுவ ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

8 views

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் : அமைச்சர், அரசு மருத்துவமனை அதிகாரிகளுடன் பேச்சு

ஆந்திர மாநிலம் நெல்லூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

10 views

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : அதிகாரிகளுடன் கர்நாடக முதலமைச்சர் ஆலோசனை

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடையத் தொடங்கி உள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா இன்று அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

7 views

"டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்கப்படும்" : துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தகவல்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் டெல்லியில் 2-வது பிளாஸ்மா வங்கி தொடங்க உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

16 views

"வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து தொகுப்பு" : ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி

கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, தேவையான அனைத்து மருந்து மாத்திரைகளுடன் கூடிய தொகுப்பை இலவசமாக வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.