இன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள்..!
பதிவு : ஜூன் 02, 2020, 07:52 AM
மாற்றம் : ஜூன் 02, 2020, 02:10 PM
இசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
இசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரை பற்றிய ஒரு தொகுப்பை இப்போது பார்ப்போம். 

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா 1976 ஆம் ஆண்டு 'அன்னக்கிளி' திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேற்கத்திய இசைக் கருவிகளை கொண்டு  அவர் மெட்டமைத்த பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் இசைத்தன. இளையராஜா பாடல்கள் பல ஆண்டுகள் கடந்தும் ரசிகர்களுடன், இன்றும் இரண்டற கலந்துள்ளன. 

கடந்த 44 ஆண்டுகளாக இளையராஜா இசையில் வெளி வந்த ஆயிரக்கணக்கான இனிமையான பாடல்கள் இன்றைய தலைமுறையினரின் விருப்பமாக இன்றும் உள்ளது. அவரது இசைக்காகவே பல திரைப்படங்கள் வெள்ளி விழா கண்டன. பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் வெளியான பல படங்கள் ரசிகர்களின் உள்ளுணர்வோடு ஒன்றிப் போயின. பாடல்கள் மட்டுமன்றி ரீ-ரெக்கார்டிங் என்னும் பின்னணி இசையிலும் பிதாமகனாக இளையராஜா திகழ்கிறார். அவர் அமைத்த இசைக் கோர்வைகள் வாத்தியங்களால் வாசிக்கப்பட்டு வெளிப்படும் போது திரைப்பட காட்சிகள் முழுமை பெற்று ரகிர்களின் மனதை கொள்ளையடிக்கும்.  

கர்நாடக ராகங்களை அடிப்படையாக கொண்டு மேற்கத்திய வாத்தியங்களை இசைக்க வைத்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியான இளையராஜாவின் பிரபலமான பாடல்கள் அவரது ரசிகர்களுக்கு எக்காலத்திலும் பொக்கிஷமாகத்தான் இருக்கும். இசை மூலம் உலகை தன்பக்கம் ஈர்த்த இளையராஜாவின் சிம்பொனி ஆல்பங்கள் அவரது ஆழ்ந்த திறமையின் உச்சமாகும்.

இசைஞானி இளையராஜாவின் ராஜாங்கம் அவரது பல கோடி ரசிகர்களின் உள்ளங்களில் என்றும் தொடரும். கொரோனா பாதிப்பில் உலகமே சோகத்தின் விளிம்பில் நிற்க, மக்களை காப்பாற்ற களத்தில் நின்றவர்களுக்காக, இளையராஜா வெளியிட்ட பாடல் புதிய நம்பிக்கையை தந்தது. இசையுடன் இசைய வைத்தது.. 

1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் பிறந்த இளையராஜா இன்று தமது 77-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது இசைப்பணி தொடந்து அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2165 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

590 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

352 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

154 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

89 views

பிற செய்திகள்

நடிகை சம்யுக்தா பெல்லி நடனம் - வீடியோ சமூக வலைதளத்தில் பதிவு

கோமாளி பட நடிகை சம்யுக்தா தனது பெல்லி டான்ஸ் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்...

17 views

நடிகர் பொன்னம்பலம் உடல்நலக்குறைவு - கமல் உதவி

ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் பொன்னம்பலம் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.

503 views

"பாலசந்தருடனான உறவு தந்தை-மகன் போன்றது" - நடிகர் கமலஹாசன்

இயக்குநர் பாலசந்தரின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவர் குறித்து நடிகர் கமலஹாசன் வீடியோ வெளியிட்டுள்ளார்.

213 views

தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய மோகன்லால்

நடிகர் மோகன் லால் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

21 views

சாந்தனுவின் முருங்கைக்காய் சிப்ஸ்

நடிகர் சாந்தனு, இயக்குனரும், தனது தந்தையுமான பாக்யராஜ் உடன் உள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

46 views

கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு தொடக்கம்

தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.