சமூக வலைதளத்தை பயனுள்ளதாக மாற்றி அசத்தல் - முன்னுதாரணமாக திகழும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி
பதிவு : மே 31, 2020, 12:39 PM
சமூக வலைதளத்தை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றி, முன்னுதாரணமாக திகழும் மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறன.
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வரும் குகன், பேரூராட்சி மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பேரூராட்சிக்கு தனி முகநூல் பக்கம் தொடங்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.மேலும் ஊரடங்கு காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு போட்டிகளை நடத்தி பயனுள்ளதாக பேரூராட்சி மாற்றியுள்ளது. தற்போது புது முயற்சியாக ஹலோ பேரூராட்சி என்ற வாட்ஸ் ஆப் செயலியை அறிமுகம் செய்து, அதன்மூலம் மக்களிடம் புகார்கள் பெறப்படுகின்றன. புகார்கள் மீது இரண்டு முதல் 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 நாட்களில் மட்டும் 40 புகார்கள் வந்துள்ளன. அவை அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த புகைப்படங்கள் பேரூராட்சி பணியாளர்களுடன் சமூக வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இதனால் பேரூராட்சி பணியாளர்களும்  உற்சாகமாக வேலை செய்து வருகின்றனர்

பிற செய்திகள்

ஐடி நிறுவனங்களுக்கு தளர்வுகள் - 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதி

சென்னை மற்றும் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் இயங்க அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

63 views

தமிழகம் முழுவதும் காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகளை பணிமாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

82 views

தமிழகத்தில் மேலும் 3,680 கொரோனா பாதிப்பு - மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,30,261

தமிழகத்தில் இன்று மேலும் 3 ஆயிரத்து 680 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

35 views

முதலமைச்சருக்கு அ​மெரிக்க நிறுவனம் "பால் ஹாரிஸ் ஃபெல்லோ - PAUL HARRIS FELLOW" என கவுரவம்

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை "PAUL HARRIS FELLOW" என அழைப்பதாக அ​மெரிக்காவில் உள்ள ரோட்டரி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

42 views

நாவலர் நெடுஞ்செழியனுக்கு சிலை - தமிழக அரசு

"சென்னை சேப்பாக்கத்தில் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை நிறுவப்படும்" என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

30 views

கேரளாவிற்கு ஹவாலா பணம் கடத்த முயற்சி - கோவையை சேர்ந்த இருவர் அதிரடி கைது

கோவையில் இருந்து கேரளாவிற்கு கடத்த முயன்ற 46 லட்சம் ரூபாய் ஹவலா பணத்தை வாளையார் சுங்கச்சாவடி அருகே கேரளா போலீஸார் பறிமுதல் செய்தனர்.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.