ஆர்.எஸ்.பாரதி கைது - திமுக மற்றும் கூட்டணி காட்சிகள் கண்டனம்
பதிவு : மே 23, 2020, 07:06 PM
மாற்றம் : மே 23, 2020, 07:18 PM
ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை தூசு தட்டி எடுத்து, அதிகாலையில் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.

* கொரோனா தடுப்பு தோல்வியை மூடி மறைக்கவும்,  நிர்வாக தோல்வியை திசை திருப்பும் செயலாகவும் இந்த கைது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக, ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

* பட்டியலின- பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும், சமத்துவ நீதிக்காகவும் காலம் காலமாக அயராது பாடுபட்டு வரும் கட்சி திமுக என்று தெரிவித்துள்ள அவர்,இதுபோன்ற நள்ளிரவு கைது நாடகங்களை பார்த்து ஒருபோதும் திமுக மிரளாது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

* இதேபோல், ஆர்.எஸ்.பாரதி கைது, எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயல் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

* அரசியல் விளையாட்டுக்கு பட்டியலின மக்களை பகடைக் காயாக்குவதா என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

* அரசியல் பழிவாங்கும் நோக்கோடு வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

* ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டது அப்பட்டமான சட்ட அத்துமீறல், பழிவாங்கும் செயல் என்று குறிப்பிட்டுள்ள
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், 
ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கை வாபஸ் வாங்கி, அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என
வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"கருணாநிதி பிறந்தநாளை உதவிகள் செய்ய உகந்த நாளாக மாற்றுங்கள்" - திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ம் தேதியை உதவிகள் செய்ய உகந்த நாளாகத் திமுகவினர் மாற்றிக் காட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

169 views

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி : ஸ்டாலின் விமர்சனம் - அமைச்சர் கண்டனம்

டெல்டா மாவட்டங்களில் உரிய காலத்தில் தூர்வாரப்படுமா? என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது கருத்துக்கு அமைச்சர் காமராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

11 views

பிற செய்திகள்

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வழங்கினார்

திருச்சியில் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆயிரத்தி ஐந்நூறு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கினார்.

20 views

மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.

15 views

வேதா இல்லம் குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கே.சி.கருப்பணன்

ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அருகே கவுந்தபாடியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது.

36 views

சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த முதலமைச்சர் அறிவிப்புகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் மற்றும் நிவாரணம் குறித்த அறிவிப்புகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்...

1068 views

"செயல்பாடு சரியாக இருப்பதால் ரஜினி, கமல் அமைதியாக உள்ளனர்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் ரஜினி, கமல் போன்றோர் அமைதியாக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறினார்.

50 views

ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.