"பா.ஜ.க. ஆட்சியின் நிலை குறித்து ஆர்.எஸ்.எஸ். வெட்கப்பட வேண்டும்" - ப.சிதம்பரம்
பதிவு : மே 23, 2020, 04:09 PM
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை, எதிர்மறை வளர்ச்சிக்கு கொண்டு சென்றுள்ள பா.ஜ.க. ஆட்சியின் நிலை குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெட்கப்பட வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
உங்கள் வேலையை பாருங்கள், நிதி நிலையை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுங்கள் என மத்திய அரசை பார்த்து இந்திய ரிசர்வ் வங்கி பட்டவர்த்தனமாக தெரிவிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாட்டின் நிகர உள்நாட்டு உற்பத்தியில், ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவுக்கு கொரோனா நிவாரண தொகுப்பை அறிவித்து விட்டு, பிரதமரும், நிதியமைச்சரும் ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வது ஏன் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எதிர்மறை வளர்ச்சிக்கு கொண்டு சென்ற பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசின் நடவடிக்கை குறித்து, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வெட்கப்பட வேண்டும் எனவும் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார். தேவை குறைந்தது தான், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் எதிர்மறைக்கு சென்றதற்கு காரணம் என கூறும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், ஏன் பணப்புழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

414 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

176 views

பிற செய்திகள்

இந்த கூட்டம் மதுப்பானம் வாங்க அல்ல - திருப்பதி லட்டு வாங்க திரண்ட மக்கள் கூட்டம்

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹிமாயத் நகரில் சாலையோரம் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்றனர்.

52 views

சானிடைசர் தெளித்தபோது பைக்கில் தீப்பற்றியது - அகமதாபாத் அரவிந்த் மில் வாயிலில் பரபரப்பு காட்சி

குஜராத் மாநிலத்தில் இருசக்கர வாகனம் மீது சானிடைசர் தெளித்தபோது திடீரென தீப்பற்றியது.

41 views

"வந்தே பாரத்": நாடு திரும்பிய 50 ஆயிரம் இந்தியர்கள் - விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்திப் சிங் பூரி அறிவிப்பு

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை ஐம்பதாயிரம் இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்துளார்.

75 views

மும்பையில் இருந்து வாரணாசிக்கு ரயில் சேவை - மத்திய அரசு திட்டமிட்டபடி சிறப்பு ரயில் சென்றது

மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு சிறப்பு ரயில் புறப்பட்டு சென்றது.

18 views

செல்போன் எண்கள்11 இலக்கமாக மாற்றமா? - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விளக்கம்

செல்போன் எண்கள் 11 இலக்கமாக மாற்றப்படுமா என்கிற சர்ச்சைக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

126 views

மதுரை சலூன் கடைக்கார‌ருக்கு பிரதமர் மோடி பாராட்டு

கொரோனாவுக்கு எதிரான போர், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

978 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.