போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கு அஞ்சலி - "2 ஆண்டாக கிடப்பில் உள்ள நினைவு தூண் கோரிக்கை"
பதிவு : மே 22, 2020, 06:28 PM
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிர் நீத்த 13-பேருக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் 2018-ல் ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடந்த  போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் சிக்கி  13-பேர் உயிரிழந்தனர். இந்த நிகழ்வின் 2 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு இன்று  அஞ்சலி செலுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த  மினிசகாயபுரத்தை சேர்ந்த  ஸ்னோலின் குடும்பத்தினர், அவரது படத்திற்கு வீட்டின் வாசல் முன்பு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல, பாத்திமா நகர் பகுதி மக்கள்  13-பேரின் பாடங்களை வைத்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த 13-பேர் நினைவாக  நினைவுத் தூண் அமைக்க அரசுக்கு 2 வருடங்களாக வைத்து வரும் கோரிக்கைக்கு இன்னும் அரசு செவிசாய்க்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசு முன்வராத நிலையில் நாங்களே நினைவு தூண் வைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11308 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

417 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

197 views

பிற செய்திகள்

கீழடியில் விலங்கின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு - காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடி 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

64 views

முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொல்லப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை விரைவு நீதிமன்றம் 2007 ல் தீர்ப்பு வழங்கியது.

7 views

தமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

27 views

கொரோனா நோயாளி கழிவறையில் உயிரிழப்பு - தற்கொலையா? மாரடைப்பா? என போலீசார் விசாரணை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

780 views

"2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கெடுப்பு" - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மின்சார கணக்கெடுப்பு முறையான வழக்கமான நடைமுறையின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

8 views

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

54 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.