கொரோனா நிவாரண நிதியாக ஒரு நாள் சம்பளம் - பிடித்தம் செய்ய போலீசார் மத்தியில் அதிருப்தி
பதிவு : மே 22, 2020, 09:36 AM
கொரொனா நிவாரண நிதியாக ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதற்கு போலீசார் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொரொனா நிவாரண நிதியாக ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதற்கு போலீசார் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஏற்கனவே ஒரு ஆயுதப்படை காவலர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் மேலும் ஒரு பெண் காவலர் சமூக வலைத்தளத்தில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கொரொனா தடுப்பு காலத்தில் ஆற்றும் பணியை சமூக சேவையாக நினைத்து செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து வசதி இன்றி  நாளொன்றுக்கு 90 கிலோமீட்டர் வரை இரு சக்கர வாகனத்தில் பயணித்ததால் தான் மிகவும் சிரம ப்பட்டதாக அந்த பெண் காவலர் குறிப்பிட்டுள்ளார். குடும்பத்தை கூட கவனிக்க முடியாத  கடுமையான சூழ்நிலையில் பணியாற்றி வரும் போலீசாரிடமிருந்து ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்வது மன வலியை தருவதாகவும், இது தொடர்பாக  உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ஆடியோவில் பெண் காவலர் தெரிவித்துள்ளார்.

\

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

368 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

154 views

பிற செய்திகள்

ஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்

சென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர்.

214 views

ஆதரவற்ற பிணவறை சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கு - அரசின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசு மருத்துவமனை பிணவறைகளில் உள்ள ஆதரவற்ற சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

16 views

கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனையை கண்டிக்கிறேன் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

55 views

தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு

4 மாவடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தாக தெரிவித்தனர்.

56 views

உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

116 views

தலைமைப் பொறியாளருக்கு எதிரான வழக்கு - சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

திருச்சி மாவட்ட மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் வளர்மதிக்கு எதிரான ஊழல் புகார் வழக்கில், சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.