ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரைக்கான புதிய விமான கட்டணம் அறிவிப்பு...
பதிவு : மே 21, 2020, 05:28 PM
வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரைக்கான புதிய விமான கட்டணங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. பயண காலத்தின் அடிப்படையில் குறைந்த மற்றும் அதிகபட்ச கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
* டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, 

* வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 20 ஆயிரம் பேர் தாயகம் அழைத்து வரப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

* நாடு திரும்ப விரும்பும் அனைத்து இந்தியர்களையும் அழைத்து வருவது நோக்கமல்ல என்றும், சிக்கலில் உள்ளவர்களை மட்டுமே அழைத்து வருவதே  நோக்கம் என தெரிவித்தார். 

* இதற்காக கூடுதல் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதற்கு தனியார் விமானங்களையும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.  

* விமான பயணங்களுக்கு ஆரோக்கி சேது செயலி அவசியம் என்றும், விமானத்தில் உணவு விநியோகம் இல்லை என்றும், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

* முக கவசம், கிரமி நாசினி பாட்டில் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பயணிகள் பின்பற்ற வேண்டும் எனவும்,  செயலியில் சிவப்பு வந்தால், அந்த பயணிகள்  பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார்.

* நகரங்களுக்கு இடையே மூன்றில் ஒரு பங்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும், 

* நகரங்களில் இருந்து பிற இடங்களுக்கு வாரத்திற்கு 100 முறைக்கு மேல் விமானங்களை இரு வழித்தடங்களில் இயக்கலாம் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு வரவேண்டும் என்றும், ஒரு பேக் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

* விமானம் பறக்கும் காலநேர அடிப்படையில், 7 வகையாக பிரித்து புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும், இது ஆகஸ்ட் 24 நள்ளிரவு வரை அமலில் இருக்கும் எனவும் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

* 90 முதல் 120 நிமிட பயண தொலைவுக்கு குறைந்த பட்ச கட்டணம் 3,500 ரூபாயாகவும், அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

* குறைந்தபட்சம் 40 சதவீத இருக்கைகள்  6,700 ரூபாய்க்கு குறைவான ​கட்டணத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் அதில் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

895 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

504 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

254 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

27 views

பிற செய்திகள்

இந்தியாவை விட்டு அமெ​ரிக்கா சென்ற நடிகை சன்னி லியோன்

ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் தனது குடும்ப பிரச்சனை காரணமாக நடிகை சன்னி லியோன், இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றார்.

15 views

திருமலைக்கு செல்ல அரசு பேருந்துகள் தயார்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களை திருமலைக்கு அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை ஆந்திர போக்குவரத்து கழகம் தீவிரமாக செய்து வருகிறது.

76 views

புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

13 views

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் அனுப்பி வைப்பு

ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சிக்கி தவித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி, சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.

9 views

மூடப்பட்ட எல்லைகளை திறக்கும் விவகாரம் - "6 லட்சம் ஆலோசனைகள்"

மூடப்பட்ட எல்லைகளை திறப்பது குறித்து, இதுவரை 6 லட்சம் ஆலோசனைகளை பெற்றுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

9 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.