பொது சேவை மையங்களில் ரயில் பயண முன்பதிவு - நாளை தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு
பதிவு : மே 21, 2020, 04:10 PM
நாடு முழுவதும் நாளை பொது சேவை மையங்களில் ரயில் பயணத்​துக்கான முன்பதிவு தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 70 ஆயிரம் பொது சேவை மையங்களில், நாளை முதல் ரயில் பயணங்களுக்கான முன்பதிவு தொடங்க உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்கள் 2 அல்லது 3 நாட்களில் செயல்பட ஏதுவான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் கூடுதல் ரயில்களை இயக்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும், ரயில் நிலையங்களில் உள்ள கடைகளை திறக்கவும் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உட்கார்ந்து உணவு உட்கொள்ள அனுதி கிடையாது என்றும் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டரை மணி நேரத்தில் மட்டும் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ய 4 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊருக்கு திரும்ப பதிவு செய்தவர்களை போல, நகரங்களுக்கு பணிக்கு திரும்ப ஏராளமானோர் முன்பதிவு செய்துள்ளது, பொருளாதார வளர்ச்சிக்கான நல்ல அறிகுறியாக அமைந்துள்ளதாகவும் அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

366 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

152 views

பிற செய்திகள்

"முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை" - வெங்கையா நாயுடு பாராட்டு

இளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

2 views

ராணுவம் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை : சண்டை நீடிப்பதால் தொடர் பதற்றம்

காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

348 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

18 views

கொரோனாவை வென்ற ஒரு மாத குழந்தை: மருத்துவர்களுக்கு ஹர்பஜன் சிங் பாராட்டு

மும்பையில் மருத்துவமனை ஒன்றில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை ஒன்று கொரோனாவை வென்றுள்ளது, இது மகிழ்ச்சியான செய்தி மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.

13 views

இந்திய சீன எல்லை பிரச்சினை - மத்திய அரசு தெளிவுப்படுத்த ராகுல் கோரிக்கை

இந்திய, சீனா எல்லை விவகாரத்தில் வெளிப்படை தன்மை எதுவும் இல்லை என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

17 views

கொரோனா எதிரொலி: கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் வசதி - இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம்

கொரோனா எதிரொலியால் கைகளை பயன்படுத்தாமல் கால்களால் அழுத்தி மின் தூக்கியை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்து.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.