ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி போராட்டம்
பதிவு : மே 21, 2020, 03:55 PM
ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரி ஆட்டோ தொழிலாளர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை

நெல்லையில் ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரியும், 15 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க கோரியும் ஆட்டோ தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக இடைவெளியுடன் மனித சங்கலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

இதேபோல் விருதுநகரிலும், ஆட்டோக்களை இயக்க அனுமதி கோரியும், நிவாரணம் வேண்டியும் ஆட்டோ தொழிலாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சமூக இடைவெளி விட்டு தொழிலாளர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். 

திருச்செந்தூர்

திருச்செந்தூரில், ஆட்டோ ஓட்டுநர்கள் 30க்கும் மேற்பட்டோர் கொரோனா நிவாரண நிதி வழங்க வேண்டி, தாலுகா அலுவலகத்தில் மனு அளித்தனர். பொது மக்களின் வசதிக்காக சமூக இடைவெளியுடன் ஆட்டோ இயக்க அனுமதி வழங்குமாறும் மனுவில் கேட்டு கொண்டனர்.

பிற செய்திகள்

அரசுக்கு எதிராக போராடிய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நீக்கம்

தேனி மாவட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்தார்.

1 views

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 8 வழிச்சாலை திட்ட மேலாளர் மனு

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

16 views

வீடுகளில் தனிமைபடுத்தும் வசதி ரத்தா? - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் அளித்த பிரத்யேக தகவல்

வீட்டில் தனிமைபடுத்தப்படும் வசதி ரத்து செய்யப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

68 views

பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் - நேரில் அழைத்து கவுரவப்படுத்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகளை, நேரில் அழைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவுரவப்படுத்தியுள்ளார்.

7 views

"தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்" - பொதுத்தேர்வு பணி குறித்து இயக்குனர் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் தொடக்கக்கல்வித் துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

6 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

106 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.