அண்ணா பல்கலை. சிறப்பு அந்தஸ்து விவகாரம் - மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் ஆலோசிக்க முடிவு
பதிவு : மே 21, 2020, 08:55 AM
சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசுடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசித்து வழங்கும் முடிவின் அடிப்படையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா பல்கலை கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கடந்தாண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து அமைச்சர்கள் குழு பரிந்துரையின் பேரில் அண்ணா பல்கலை கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவெடுத்த தமிழக அரசு மேலும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவிகித இடஒதுக்கீட்டை தொடருவது குறித்தும் மத்திய அரசிடம் விளக்கம் கோரப்பட்டது. இதற்கு மத்திய அரசு தரப்பிலிருந்து உரிய பதில் கிடைக்காத நிலையில் சிறப்பு அந்தஸ்தை ஏற்பதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மே மாத இறுதிக்குள் தமிழக அரசு தனது முடிவினை தெரிவிக்குமாறு மத்திய அரசு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டது. இந்த கடிதம் தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசு அமைத்த அமைச்சர்கள் குழு அண்ணா பல்கலை துணைவேந்தர், உயர் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் நேற்று முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். இதில்  69 சதவீத இடஒதுக்கீடு முறைக்கு பாதிப்பின்றி திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் அண்ணா பல்கலைக்கழகம் ஆலோசனை மேற்கொண்டு அதன் முடிவுகளை தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்தை ஏற்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என தெரிகிறது.

பிற செய்திகள்

68 நாட்களுக்கு பின்னர் திறந்த சலூன் கடைகள் - சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பிறப்பித்த ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ள நிலையில், சலூன் கடைகள் சில தளர்வுகளுடன் இன்று முதல் சென்னையில் செயல்படத் தொடங்கி உள்ளது.

4 views

முடிவுக்கு வந்த மீன்பிடி தடைகாலம் : 45 நாட்களுக்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 120 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு புறப்பட்டனர்.

5 views

"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"

தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.

34 views

புதிய பல்சர் பைக் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை : சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் பேங்க் ரோடு பகுதியில் வசித்த வந்த அருண் என்பவரது, புதிய பல்சர் பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

13 views

2 மாதங்களுக்கு பிறகு பணி - அரசுப் பேருந்து ஓட்டுனரின் டிக் டாக் வீடியோ

2 மாதங்களுக்கு பிறகு பணிக்கு திரும்பும் அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர், பேருந்தை ஆவலுடன் தேடி சென்று கண்டுப்பிடிப்பதை டிக்டாக் செய்துள்ளார்.

26 views

கொரோனா பாதிப்பிலும் அழியாத மனிதாபிமானம் - பிச்சைக்காரர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்

சென்னை போரூரில், சாலையோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரருக்கு அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

233 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.