வெளிமாநில தொழிலாளர்களுக்கு செய்து கொடுத்த வசதிகள் என்ன? - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
பதிவு : மே 21, 2020, 08:37 AM
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் தமிழக அரசு செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சிக்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்களை தங்க வைக்க உள்ள  சமூக நல கூட விவரங்களை அறிவிக்கக்கோரி கொளத்துரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன நிர்வாகி திலக்கராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில்  பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள்  சத்தியநாரயணன் மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.அப்போது வெளி மாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 799 தொழிலாளர்கள் அரசின் செலவில் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளி மாநில தொழிலாளர்களுக்கான தங்கும் வசதி சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் திட்டம் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 26ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்

தொடர்புடைய செய்திகள்

பொதுமக்களுக்கு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கி உதவும் சல்மான் கான்

மும்பையில் ஏராளமான பொதுமக்களுக்கு நடிகர் சல்மான் கான் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்.

107 views

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

44 views

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் ரூ.638 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்

கொரோனா பாதிப்பால் உலக நாடுகளின் உற்பத்தில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

14 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவின் வாரிசுகள் நீதிமன்ற தீர்ப்புக்கு திருநாவுக்கரசர் வரவேற்பு

ஜெயலலிதாவின் வாரிசுகளாக தீபா மற்றும் தீபக்கை நீதிமன்றம் அறிவித்திருப்பது மகிழ்ச்சி என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

43 views

பாலைவன வெட்டுக்கிளி தென்மாநிலங்களுக்கு வர வாய்ப்பு குறைவு - வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர்

பாலைவன வெட்டுக்கிளிகள் தென் மாநிலங்களுக்கு வர குறைவான வாய்ப்புகளே உள்ளதாக வேளாண்மைத் துறை முதன்மை செயலாளர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

12 views

சென்னையில் இன்று மேலும் 616 பேருக்கு கொரோனா

சென்னையில் மேலும் 616 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக, தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

18 views

தமிழகத்தில் இன்று மேலும் 938 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் இன்று, மேலும் 938 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக தமிழக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

49 views

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

752 views

கொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - "பாரத பூமி" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்

கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

44 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.