"கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய ரூ.350.29 கோடி செலவு" - உயர்நீதிமன்ற கிளையில் தமிழக அரசு பதில்
பதிவு : மே 21, 2020, 08:32 AM
கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 350 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவாகியிருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு முன் களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய  350 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவாகியிருப்பதாக தமிழக அரசு உயர்நீதிமன்ற கிளையில் தெரிவித்துள்ளது.  இது தொடர்பான பொதுநல வழக்கில் வருவாய்த்துறையின் முதன்மைச் செயலர் நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். விளக்கங்களை கேட்டறிந்த நீதிபதிகள் முன்களப்பணியாளர்கள் பாதுகாப்பு கவசங்களை பயன்படுத்துவதை உறுதி செய்ய வழிமுறைகள் ஏதும் உள்ளதா எனக் கேள்வி எழுப்பியதோடு வரும் 27ஆம் தேதிக்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்?" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறியது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

883 views

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

44 views

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தெருக்கூத்துக் கலைஞர்கள்

ஊரடங்கு உத்தரவால் கோவில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கிராமிய தெருக்கூத்து கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

36 views

நிவாரண தொகை வழங்க கோரி புதுச்சேரி முதலமைச்சரிடம் மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மனு

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலத்தின் போது அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடியாக வழங்கக் கோரி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை 18 மீனவ கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு வழங்கினர்.

22 views

பிற செய்திகள்

ஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்

சென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர்.

259 views

ஆதரவற்ற பிணவறை சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கு - அரசின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசு மருத்துவமனை பிணவறைகளில் உள்ள ஆதரவற்ற சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

17 views

கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனையை கண்டிக்கிறேன் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

89 views

தமிழகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான ஊரடங்கு தேவையில்லை - மருத்துவ நிபுணர் குழு

4 மாவடங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தாக தெரிவித்தனர்.

82 views

உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்- முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த செவிலியர் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

143 views

தலைமைப் பொறியாளருக்கு எதிரான வழக்கு - சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவு

திருச்சி மாவட்ட மின் பகிர்மான கழக தலைமை பொறியாளர் வளர்மதிக்கு எதிரான ஊழல் புகார் வழக்கில், சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.