நாளுக்கு நாள் சரிவடைந்த டாஸ்மாக் விற்பனை - டாஸ்மாக் நிறுவனம் தகவல்
பதிவு : மே 20, 2020, 08:15 PM
கடந்த நான்கு நாட்களில் மாநிலம் முழுவதும் 495.4 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து பல்வேறு கட்டுபாடுகளுடன் மது விற்பனை தமிழக முழுவதும் மீண்டும்  கடந்த 16 ஆம்  தேதி தொடங்கியது. சென்னை மாநகரம் உள்ளிட்ட சிவப்பு  மண்டல பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

* முதல் நாளான 16 ஆம் தேதி 163 கோடி ரூபாய்க்கும், இரண்டாவது நாளான 17 ஆம் தேதி 133.1 கோடி ரூபாய்க்கும் மூன்றாம் நாளான18 ஆம் தேதி108.3 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகி உள்ளது. 

* முதல் நாளான 16 ஆம் தேதி சென்னை மண்டலத்தில் 4.2 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில்  40.5 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 44.7 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 41.07 கோடி ரூபாய்க்கும் கோவை மண்டலத்தில் 33 .05 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

* இரண்டாவது நாளான 17 ஆம் தேதி சென்னை மண்டலத்தில் 5.6 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 32.5 கோடி ரூபாய்க்கும்,
மதுரை மண்டலத்தில்34.8 கோடி ரூபாய்க்கும் சேலம் மண்டலத்தில் 29.6 கோடி ரூபாய்க்கும் கோவை மண்டலத்தில் 30.6 கோடி ரூபாய்க்கும் மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளன.

* 28 கோடி ரூபாய்  விற்பனை உடன்  மூன்றாவது நாளான 18 ஆம் தேதி தமிழகத்தில் மதுரை மண்டலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் மது வாங்க வருபவர்களுக்கு வழங்கப்படும் டோக்கன் எண்ணிக்கை 750 ஆக உயர்த்தப்பட்டதும், மது விற்பனை நேரம் மாலை 7 மணி வரை நீட்டிப்பாலும் விற்பனை அதிகரிப்பு என கூறப்படுகிறது.

* சென்னை மண்டலத்தில் ரூ.6.5 கோடி ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 26.4 கோடி ரூபாய்க்கும், மதுரை மண்டலத்தில் 28.6 கோடி ரூபாய்க்கும், சேலம்  மண்டலத்தில்24.3 கோடி ரூபாய்க்கும் , கோவை  மண்டலத்திவ் 22.5 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடைபெற்று உள்ளது.

* தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 91 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது. சென்னை மண்டலத்தில் 6.2 கோடி ரூபாய்க்கும்,  திருச்சி மண்டலத்தில் மட்டும் அதிகபட்சமாக 23.2 கோடி ரூபாய்க்கும்,  மதுரை  மண்டலத்தில் 22.2 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்திவ் 20.6 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 19.4 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளது. 

* கடந்த நான்கு  நாட்களாக தமிழக முழுவதும் 495.4 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்று உள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டாலும், கடந்த நான்கு நாட்களில்  விற்பனை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

கீழடியில் விலங்கின் எலும்பு கூடு கண்டுபிடிப்பு - காமராசர் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைப்பு

சிவகங்கை மாவட்டம், கீழடி 6ம் கட்ட அகழாய்வில் விலங்கின் எலும்பு கூடு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

73 views

முன்னாள் எம்.எல்.ஏ பாலன் கொலை வழக்கு - ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

கடந்த 2001ஆம் ஆண்டு முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே.பாலன் கொல்லப்பட்ட வழக்கில் 16 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை விரைவு நீதிமன்றம் 2007 ல் தீர்ப்பு வழங்கியது.

9 views

தமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

33 views

கொரோனா நோயாளி கழிவறையில் உயிரிழப்பு - தற்கொலையா? மாரடைப்பா? என போலீசார் விசாரணை

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

874 views

"2 மாதங்களுக்கு ஒருமுறை மின்சார கணக்கெடுப்பு" - தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மின்சார கணக்கெடுப்பு முறையான வழக்கமான நடைமுறையின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

8 views

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று - தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

59 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.