மயானத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற கும்பல் - ஈரோடு அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு
பதிவு : மே 20, 2020, 03:50 PM
மயானத்தை ஆக்கிரமிப்பு செய்ய சென்றவர்களை தடுத்து நிறுத்திய 2 பேர் மீது மண்ணை கொட்டி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பகுதியில் கோயில்களில் பூஜை செய்யும் பூசாரிகள் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் அம்மன்கோயில்பதியில் உள்ள இடத்தை மயானபூமியாக பயன்படுத்தி வந்த நிலையில் லோகநாதன் என்பவர் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் லோகநாதன் மயானத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சித்துள்ளார். இதை தடுக்க சென்ற ஜெயவேல் மற்றும் கிரி என்பவர் மீது டிராக்டரில் உள்ள மண்ணை கொட்டி கொல்ல முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக 2 பேரையும் மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பிற செய்திகள்

பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இடஒதுக்கீடு சிதைக்கப்படுவதை அனுமதிக்க கூடாது - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் உள்ள மாநில பல்கலைக் கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

0 views

வேலையற்றோர் எண்ணிக்கை உயர்வு - டெல்லியில் வேலையின்மை விகிதம் 59.2 %

இந்தியாவின் வேலையற்றோர் விகிதம் 23 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

42 views

விலை உயரத் தொடங்கிய எரிவாயு சிலிண்டர்கள் - தொழில் நடவடிக்கைகள் மீண்டு வருவதால் விலை ஏற்றம்

மானியமில்லா எரிவாயு சிலிண்டர் விலை 11 ரூபாய் 50 காசுகள் விலை அதிகரித்துள்ளது.

375 views

ரயிலில் காலியாக இருந்த இருக்கைகள்: "சமூக விலகலில் பயணிகள் அலட்சியம்" - கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம்

கோவையில் இருந்து காட்பாடிக்கு சேலம் வழியாகச் சென்ற சிறப்பு ரயிலில், சமூக இடைவெளியில் பயணிகள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

24 views

2 பயணிகளுடன் ஆட்டோக்கள் இயங்க அனுமதி : 68 நாட்களுக்கு பின்னர் ஆட்டோக்களை இயக்குவதால் ஓட்டுநர்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று முதல் அரசு விதித்த நிபந்தனைகள் படி ஆட்டோக்கள் இயங்கத் தொடங்கி உள்ளன.

47 views

திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் பழனிசாமி

திரைப்பட தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ஆயிரம் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.