ஊரடங்கு தளர்வுக்கு பிறகும் வெளியே வர தயங்கும் மக்கள்? - கூகுள் தகவல்கள் சொல்லும் செய்தி
பதிவு : மே 20, 2020, 08:58 AM
ஊரடங்கினை மக்கள் எந்தளவிற்கு கடைபிடித்துவருகிறார்கள் என்பது பற்றிய புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது.
உலகையே ஆட்டுவித்துவரும் கொரோனாவின் தாக்கத்திலிருந்து மக்களை காக்க பல நாடுகளும் ஊரடங்கு உத்தரவினை நடைமுறைப்படுத்தியுள்ளது. அந்தவகையில், இந்தியாவில் தற்போது 4 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் மக்களின் நகர்வுகள் பற்றி ஆய்வு செய்த கூகுள் நிறுவனம் அதுபற்றிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. 
ஸ்மார்ட்போன்களின் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, Google Maps போன்ற செயலிகள் போக்குவரத்து நெரிசலை காட்டும் தொழில்நுட்பம்தான், ஊரடங்கை மக்கள் எப்படி கடைபிடிக்கிறார்கள் என்று கண்டறியவும் உதவியுள்ளது. அதன்படி, முதல்கட்ட ஊரடங்கு தொடங்கிய மார்ச் 25 முதல், மே மாதம் 9 ஆம் தேதி வரையிலான தரவுகளை ஆராய்ந்தால், ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்ட பிறகும்கூட, தமிழகத்தில் மக்கள் வீடுகளில்தான் இருக்க விரும்புகிறார்களோ என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக தமிழகத்தில், முதல்கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள் போன்ற பொழுதுபோக்கு மற்றும் வணிகம் சார்ந்த இடங்களுக்கு மக்கள் செல்வது 80% குறைந்தது. மேற்கண்ட இடங்களில் மூன்றாம்கட்ட ஊரடங்கிலும், இதே நிலையே நீடிக்கிறது. மக்கள் நடமாட்டம் அதிகரிக்கவில்லை. முதல்கட்ட ஊரடங்குடன் ஒப்பிடுகையில், பூங்காக்கள், கடற்கரைகள் போன்ற இடங்களில் மூன்றாம் கட்ட ஊரங்கில் மக்கள் நடமாட்டம் மேலும் 3% குறைந்துள்ளதே தவிர, அதிகரிக்கவில்லை. முதல்கட்ட ஊரடங்குடன் ஒப்பிடுகையில் ரயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் மூன்றாம் கட்ட ஊரடங்கில் மக்கள் நடமாட்டம் 14% அதிகரித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது இதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு அலுவலகங்கள், தொழிற்சாலைகள் 30% முதல் 50% வரையிலான பணியாளர்களுடன் இயங்கலாம் என்ற அனுமதி கிடைத்தாலும், முதல்கட்ட ஊரடங்குடன் ஒப்பிடும்போது அலுவலக பகுதிகளில் மக்கள் நடமாட்டம் 11% மட்டுமே அதிகரித்துள்ளது.இதில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்களின் எண்ணிக்கைதான் அதிகபட்சமாக 28% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதல்கட்ட ஊரடங்கு காலத்தில் வழக்கமான நாட்களை விட குடியிருப்பு பகுதிகளில் மக்கள் நடமாட்டம் 33% அதிகரித்திருந்தது. ஆனால், அதிகப்படியான தளர்வுகள் வழங்கப்பட்டபிறகும், மூன்றாம்கட்ட ஊரடங்கிலும், மக்கள் நடமாட்டம் கிட்டத்தட்ட இதே அளவிலேயே இருக்கிறது. மொத்தத்தில், பெரும்பாலான மக்கள் இன்னமும் வீடுகளில் தான் இருக்கிறார்கள் என்பதை முடிவுகள் காட்டுகின்றன. அப்படியே வெளியே வந்தாலும், பெரும்பாலும் அத்தியாவசிய தேவைகளுக்காகவே மக்கள் வீட்டைவிட்டு வெளிவருகிறார்கள், என்று தெரியவந்துள்ளது. மாறாக, அலுவலகங்களுக்கோ, பொழுதுபோக்கிற்காகவோ மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவது அதிகரிக்கவில்லை என்பது தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11293 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

413 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

196 views

பிற செய்திகள்

கருப்பின நபர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்- கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கருத்து

சமூக வலைத்தளங்களான கூகுள் மற்றும் யூடியுப் ஆகியவை, இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

3870 views

கருப்பின நபரின் மரணத்திற்கு நியாயம் கோரி போராட்டம் : ராணுவம் தயார்நிலையில் இருக்க டிரம்ப் உத்தரவு

கருப்பின நபர் ஃப்ளோயிட் என்பவரின், மரணத்திற்கு நியாயம் வழங்க கோரி அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டம், 25 நகரங்களுக்கு பரவியது.

19 views

விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் : சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

22 views

பெல்ஜியம் இளவரசர் ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று

பெல்ஜியம் நாட்டின் இளவரசரும் அந்நாட்டு அரசரின் ஒன்று விட்ட சகோதரருமான ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

24 views

ஆறுமுகன் தொண்டமான் உடலுக்கு இறுதிச்சடங்கு - ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு

அண்மையில் இலங்கையில் மரணம் அடைந்த அந்நாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்குகள் தற்போது நுவரெலியா நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

20 views

உலகிலேயே வயதான நபர் உயிரிழப்பு - கேன்சர் நோயால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல்

உலகிலேயே மிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயதான பாப் வெய்டன், உயிரிழந்தார்.

310 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.