புயலால் நிலச்சரிவு அபாயம் - ஒடிஷாவில் மக்களுக்கு எச்சரிக்கை
பதிவு : மே 20, 2020, 07:45 AM
அம்பன் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிஷா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
அம்பன் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில் ஒடிஷா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், பலசார் பகுதியில் உள்ள மிர்ஜாபுர் உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்களுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதிகாலையில் ஒரு மணி நேரத்தில் 11 மி.மீ. மழை : ஒடிஷாவில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் புயல்

ஒடிஷாவை புயல் நெருங்கியுள்ள நிலையில் அங்கு மணிக்கு 82 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இன்று அதிகாலை 4 மணி அளவில் பத்ராக் என்ற இடத்தில் ஒரு மணி நேரத்துக்குள் 11 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. அந்த பகுதியில் இன்று நிலச்சரிவு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், ஒடிஷாவின் பாரதீப் நகரில் இருந்து 210 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது புயல் இருப்பதாகவும் இன்று மாலை நேரத்தில் மேற்கு வங்கத்தின் திகா மற்றும் வங்க தேசத்தின் ஹதியா தீவுகளுக்கு இடையே புயல் கரையை கடக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்துள்ளது. தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

708 views

மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

187 views

"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

72 views

பிற செய்திகள்

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிப்பு

மத்திய பிரதேசத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கு வரும் ஜூன் 15ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

35 views

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

750 views

"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.

64 views

"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

1819 views

வெட்டுக்கிளி படையெடுப்பு - விமான துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

வெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் கேட்டுககொண்டுள்ளது.

347 views

"முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை" - வெங்கையா நாயுடு பாராட்டு

இளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.