விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சாரத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
பதிவு : மே 19, 2020, 05:07 PM
"கொரோனா கடன்" வாங்குவதற்காக, விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சாரத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை, அதிமுக அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
"கொரோனா கடன்" வாங்குவதற்காக, விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சாரத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை, அதிமுக அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  21 லட்சத்திற்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சாரத் திட்டத்தையோ, அல்லது வேறு நுகர்வோருக்கான இலவச மின்சாரத் திட்டத்தையோ ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை தமிழக அரசு, எந்தச் சூழ்நிலையிலும் ஒப்புக் கொள்ளக் கூடாது என கூறியுள்ளார்."மத்திய பா.ஜ.க. ஆட்சியை பகைத்துக் கொள்ள வேண்டாம் என சுயநலம் கருதி அமைதியாக இருந்து விடாமல்,தமிழக விவசாயிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிட அ.தி.மு.க. அரசு நெஞ்சுயர்த்தி நிற்க வேண்டும் என அந்த அறிக்கையில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.அதோடு மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை, தங்களது நோக்கத்திற்காக பயன்படுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டிப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

879 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

492 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

180 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

118 views

பிற செய்திகள்

தனியார் நிதி நிறுவனம் மூலம் கல்வி கடன்: தனியார் பள்ளிகள் சங்கத்தின் முயற்சிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தனியார் நிதி நிறுவனம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

97 views

செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம்: ரஜினி பாராட்டுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதில்

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

37 views

ஊரடங்கு உத்தரவால் ரூ.17,000 கோடி வருவாய் இழப்பு - அமைச்சர் கே.சி. வீரமணி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்வில், கொரோனா சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

157 views

கருணாநிதி பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உதயநிதி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அகட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழகினார்.

35 views

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

39 views

தமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

83 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.