"ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயல்" - பிரதமர் நரேந்திர மோடி அரசு மீது சந்திரசேகர ராவ் சாடல்
பதிவு : மே 19, 2020, 03:47 PM
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியை பயன்படுத்தி பா.ஜ.க., மாநிலங்களை ஆட்சி செய்ய முற்படுவதாகவும், மத்திய அரசு அறிவித்த கொரோனா நிவாரண அறிவிப்புகள் மோசடியானவை என்றும் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டி உள்ளார்.
* கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட நிதிநெருக்கடியை எதிர்க்கொள்ள மத்திய அரசு 20 லட்சம் கோடி ரூபாய்க்கான நிவாரணத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

* இது முற்றிலும் மோசடி, வெற்று அறிவிப்பு  மற்றும் எண்களின் மாயாஜாலம் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விமர்சித்துள்ளார். 

* இந்த நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, மாநிலங்களின் மேல் ஆட்சி செலுத்த  முயலுவதாக குற்றம்சாட்டி உள்ளார்.

* இது, கூட்டாட்சி தத்துவத்தை மீறும் நடவடிக்கை என மத்திய அரசை அவர் சாடியுள்ளார். 

* மாநிலங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யாத நிலையில், மாநில அரசுகள் தங்கள் நிதி தேவைகளை எதிர்க்கொள்ளவும், கடன் திரட்டவும் விதித்துள்ள நிபந்தனைகளும் கேலிக்குரியவை என்றும் சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டி உள்ளார். 

* மாநில அரசுகளையும், மக்களையும் மத்திய அரசு ஏமாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார். 

* மாநில அரசுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் என்றும், மத்திய அரசின் துணை அமைப்புகள் அல்ல என்றும் சந்திரசேகர ராவ் சாடியுள்ளார். 
 
* இதுபோன்ற ஒரு நிதி தொகுப்பை அறிவித்து உள்ளது மூலம், மக்கள் மத்தியில் மோடி அரசுக்கு இருந்த மரியாதை முற்றிலும் சீர்குலைந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

* கூடுதல் உபரி வரி விதிப்பின் மூலம் மக்களை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சித்து வருவதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

859 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

479 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

440 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

165 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

54 views

பிற செய்திகள்

இந்தியா, ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாடு - காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்

நாளை நடைபெறவுள்ள இந்தியா-ஆஸ்திரேலியா மெய்நிகர் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார்.

22 views

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

8 views

கரையை கடந்தது "நிசர்கா புயல்" : ஹரிஹரேஸ்வர் - டாமன் இடையே, கரையை கடந்தது

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், மும்பை அலிபாக் அருகே ஹரிஹரேஸ்வர் - டாமன் இடையே கரையை கடந்தது.

10 views

கரையை கடக்க துவங்கிய "நிசர்கா புயல்"

அரபிக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல், மும்பை அலிபாக் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் கரை கடக்கத் தொடங்கியது.

12 views

எல்லை பிரச்சனைக்கு தீர்வுக்காண ஜூன் 6-ல் இந்தியா, சீனா பேச்சுவார்த்தை

கிழக்கு லடாக்கில் இந்திய சீன எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக நீடித்து வரும் சிக்கலுக்கு தீர்வுக் காணும் வகையில் லெப்டினட் ஜெனரல் நிலையிலான அதிகாரிகள் வரும் சனிக்கிழமை பேச்சு நடத்த உள்ளனர்.

84 views

"மக்கள் பிரதிநிதிகளின் அந்தரங்க உரிமையை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உண்டு" - டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி

சசிகலா புஷ்பா தொடர்ந்த வழக்கு ஒன்றில் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.