வாராக்கடன் நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்படுமா ? - அதிக அழுத்தங்களால் புலம்பும் வங்கி அதிகாரிகள்
பதிவு : மே 19, 2020, 08:51 AM
இந்திய பொதுத் துறை வங்கிகள் ஏற்கனவே வராக்கடனில் தத்தளித்து வரும் நிலையில், மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களுக்கு வங்கிகள் ஒத்துழைப்பு அளிக்குமா என்பது கேள்விக்குறி தான் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொருளாதார ஊக்குவிப்பு திட்டமாக ,வங்கிக் கடன் வாடிக்கையாளர்கள் கடன் தவணையை 3 மாதங்கள் ஒத்தி வைக்கலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. இந்த அறிவிப்பை எந்த வங்கிகளும் கடை பிடிக்காத  நிலையில் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. ஏற்றுக்கொண்ட வங்கிகளும் வட்டியை  கணக்கிட்டு வசூலிப்பதால்,கடன் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்தடுத்து வெளியிட்டுள்ள பொருளாதார ஊக்குவிப்பு கடன் திட்டங்களை  வங்கிகள் எப்படி செயல்படுத்தும் என்பது கேள்விக்குறியாக உள்ளதாக வங்கியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே வாராக்கடனில் வங்கிகள் தத்தளித்து வரும் நிலையில்,அரசின் நிதித் திட்டங்களை செயல்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடுகள் குறித்து குழப்பம் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, திவால் நிதி மோசடி சட்ட நடவடிக்கையில் இருந்து ஒரு ஆண்டுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால்,வாராக்கடன் அதிகரித்தால் ஒரு ஆண்டுக்கு நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இதனால், வங்கிகள் கடன் வழங்குவதில் தயக்கம் காட்டும் என்றும், அல்லது கடன் வாங்கி கட்டாமல் விட்டால் வாராக்கடன் உயரும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. நிதியமைச்சரின் பொருளாதாரத்தை ஊக்குவிப்பு திட்டங்களால் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகளின் புலம்பத் தொடங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சித்ரா நடித்த "கால்ஸ்" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - முதல் படமே கடைசி படமான சோகம்

சமீபத்தில் தற்கொலை செய்த சின்னத்திரை நடிகை சித்ரா நடித்துள்ள "கால்ஸ்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

410 views

ஜாக்கிசானின் "வாங்கார்ட்" பட டிரெய்லர் - நடிகர் மாதவன் வெளியீடு

ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானின் வாங்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் வெளியிடுகிறார்.

63 views

பிற செய்திகள்

போபாலில் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - தண்ணிரை பீய்ச்சி அடித்து விரட்டிய போலீஸ்

மத்தியப் பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆளுநர் மாளிகையை நோக்கி முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணி சென்றனர்.

6 views

குடியரசு தினத்தில் டெல்லி நகரில் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி

விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினத்தில் டெல்லி நகரில் டிராக்டர் பேரணி நடத்த போலீஸ் அனுமதி அளித்திருப்பதால் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

18 views

12 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு - மத்திய அரசு தகவல்

சத்தீஸ்கர், அரியானா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், குஜராத், உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநில பண்ணைகளில் உள்ள பறவைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்ட உள்ளது.

7 views

கணவருடன் விவாகரத்து சிக்கல் இல்லை - லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்க்கை

அரை நிர்வாண உடையில் குழந்தைகளை வைத்து ஓவியம் வரைந்து சர்ச்சையில் சிக்கிய கேரளாவை சேர்ந்த ரெஹானா பாத்திமா தன் கணவரை பிரிய உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

13 views

டெசர்ட் நைட் 21 விமான போர் பயிற்சி - ரபேல் விமானங்கள் சாகசம்

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரி​ல் இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப் படைகள் இணைந்து போர் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

6 views

17 வயது சிறுவன் மீது கொடூர தாக்குதல் - சமூக வலைதளங்களில் பரவும் தாக்குதல் காட்சிகள்

கேரளாவில் 17 வயது சிறுவனை நண்பர்கள் கொடூரமாக தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.