ஊரகப்பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதி...
பதிவு : மே 18, 2020, 05:40 PM
ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஊரகப்பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகள் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகர காவல் எல்லை, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அனுமதியில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அனுமதி வழங்கியுள்ளதாகவும், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். "முடி திருத்தும்  நிலையங்களில் தினம்தோறும் 5 முறை கிருமி நாசினி தெளிக்க வேண்டும்" என்றும்..."கையுறை அணிந்து முடிதிருத்த வேண்டும் என்றும், முகக் கவசம் அணிவது கட்டாயம் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அடிக்கடி சோப்பு கொண்டு கைகழுவுவது அவசியம் என்றும்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

859 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

480 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

440 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

166 views

தொடர்ந்து 14 நாட்கள் புதிய தொற்று இல்லையென்றால் கட்டுப்பாடு விலக்கப்படும் - சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்

சென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

62 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

55 views

பிற செய்திகள்

சென்னை தண்டையார்பேட்டையில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தண்டையார்பேட்டையில் மேலும் 95 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.

4 views

துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 15 பேருக்கு கொரோனா

துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னை வந்த 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

18 views

தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணவே விரும்புகிறோம் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீர்வு காணவே விரும்புகிறோம் என்றும், மனு செய்யும் போது வழக்கில் தொடர்புடையவர்களின் செல்போன் எண், இமெயில் முகவரி உள்ளிட்ட விபரங்களை தெரியபடுத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

7 views

ஜூன் 15க்குள் மின்கட்டணம் செலுத்தலாம்: "சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அவகாசம்" - தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு தவிர, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் மின் கட்டணம் ஜூன் 15 தேதி வரை செலுத்தலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

23 views

மின் பயன்பாடு அளவீடு விவகாரம் : தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம்

மின்சார கணக்கெடுப்பு முறையான வழக்கமான நடைமுறையின்படி இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அளவீடு செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

94 views

தமிழகத்தில் சமய வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம்? - சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது பற்றியும், அப்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்தும் சமய தலைவர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.