"கொரோனா பாதிப்பில் உச்சம் - ரத்த பற்றாக்குறை"
பதிவு : மே 18, 2020, 11:46 AM
நாட்டிலேயே கொரோனாவால் அதிகம் பாதித்த மகாராஷ்டிராவில், தொற்று எண்ணிக்கை 33 ஆயிரத்து 53 ஆக அதிகரித்த நிலையில், அங்குள்ள ரத்த வங்கிகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, மொத்த பாதிப்பில் ஆயிரத்து 198 பேர் உயிரிழந்த நிலையில், 7ஆயிரத்து 688 பேர் குணமடைந்துள்ளனர். தானே உள்ளடக்கிய மும்பை மாநகரில்  மட்டும், 25 ஆயிரத்து 130 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 811 பேர் இறந்துள்ளனர். தாராவியில் கொரோனாவால் 56 பேர் இறந்த நிலையில், ஆயிரத்து 242 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து மும்பை விமானநிலைய வாகன நிறுத்தம் உள்பட பல இடங்களில் ஒரு லட்சம் படுக்கை வசதிகளை அமைக்கும் பணிகளில் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே, மகாராஷ்டிராவில் உள்ள 58 ரத்த சேமிப்பு வங்கிகளில், பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக மாநில ரத்த வங்கி மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பால் ரத்த சேமிப்பு நாளொன்றுக்கு 900 யூனிட்டில் இருந்து 400 யூனிட்டாக குறைந்ததே இதற்கு காரணம் என விளக்கம் அளித்துள்ள அந்த அமைப்பு, தற்போது இருப்பில் உள்ள ரத்தம் அடுத்த 10 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11304 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

417 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

197 views

பிற செய்திகள்

நெருங்கும் 'நிகர்ஷா' - குஜராத், மஹாராஷ்டிரா முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி பேச்சு

நிகர்ஷா புயல் இன்று கரையை கடக்க உள்ளதால் மஹாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானியுடன் பிரதமர் மோடி தொலைபேசியின் பேசியுள்ளார்.

30 views

ஒப்பந்தப்படி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வரும் - ராஜ்நாத் சிங்

ரஃபேல் போர் விமானங்கள் ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட காலத்தில் இந்தியாவிற்கு வந்து சேரும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

36 views

ஜி -7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் அழைப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் தொலைபேசி மூலம் பேசினர்.

119 views

ஒரே நாளில் இத்தனை பிரபலங்களுக்கு பிறந்தநாளா?

இசை அமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் மணி ரத்னம், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் என இத்தனை பிரபலங்களும் நேற்று தான் பிறந்தநாள்.

913 views

கொரோனா சிசிக்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு மன அழுத்தத்தை போக்க நடனம் ஆட அனுமதி

கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களின் மன அழுத்தத்தை போக்க, நடனம் ஆட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

5 views

துணை நிலைஆளுநருக்கு எந்த புகாரையும் நேரடியாக விசாரிக்க அதிகாரம் கிடையாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

துணை நிலை ஆளுநருக்கு எந்த புகாரையும் நேரடியாக விசாரிக்க அதிகாரம் கிடையாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.