திருவள்ளூர் : காவல் நிலையத்தை முற்றுகையிட்ட வடமாநில தொழிலாளர்கள் - சம்பள பாக்கியை பெற்று தர கோரிக்கை
பதிவு : மே 17, 2020, 07:57 AM
திருவள்ளூர் மாவட்டம், பாதிரிவேடு காவல் நிலையத்தை வடமாநில தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த காரமேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காகித உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கு, ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்துவரும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர், திடீரென பாதிரிவேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். விசாரணையில், தொழிற்சாலை நிர்வாகத்தினர் சம்பளம் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவில்லை எனவும், உடனடியாக சம்பள பாக்கியை பெற்று தந்து, சொந்த மாநிலத்திற்கு, அனுப்பி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

374 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

156 views

பிற செய்திகள்

ஊரடங்கு தொடர்பாக உள்துறை அமைச்சகம் புதிய உத்தரவு

ஊரடங்கு தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

9 views

கொரோனா முன்கள பணியாளர்கள் கவுரவிப்பு - "பாரத பூமி" தலைப்பில் இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் பாடல்

கொரோனா முன்கள பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக இசையமைப்பாளர் இளையராஜா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

43 views

புதிதாக வாங்கப்பட்ட எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு : கன்னியாகுமரி வந்தடைந்தது - அதிகாரிகள் நேரில் ஆய்வு

பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழகம் சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள எம்.எல்.தாமிரபரணி சொகுசு படகு கன்னியாகுமரி வந்தடைந்தது.

259 views

ஒரே நாளில் கொரோனா பிரிவில் 5 பேர் மரணம்

சென்னையில், ஒரே நாளில், கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்தவர்களுள் 5 பேர் உயிரிழந்தனர்.

330 views

ஆதரவற்ற பிணவறை சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கு - அரசின் அறிக்கை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி

அரசு மருத்துவமனை பிணவறைகளில் உள்ள ஆதரவற்ற சடலங்களை தகனம் செய்ய கோரிய வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

39 views

கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனையை கண்டிக்கிறேன் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.