"நிதி ஒதுக்கீடு தொடர்பாக விளக்கம் தேவை" - மத்திய நிதியமைச்சருக்கு காங்., வலியுறுத்தல்
பதிவு : மே 16, 2020, 02:47 PM
தேனி வளர்ப்பு, கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டு தொடர்பாக நிதியமைச்சர் நேற்று அறிவித்த அறிவிப்புகள் குறித்து விளக்கம் அ​ளிக்க காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது.
தேனி வளர்ப்பு தேசிய தோட்டக்கலை முன்னோடித் திட்டத்தில் சேர்க்கப்பட்டு அதற்கு நடப்பு  நிதியாண்டில் இரண்டாயிரத்து 400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதை, முன்னாள் நிதியமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், இதேபோன்ற கால்நடைகளுக்கு வாய் மற்றும் காலில் ஏற்படும் நோயை தடுக்கும் பணி, விலங்குகள் நோய் தடுப்புத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு உள்ளதையும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நினைவுபடுத்தி உள்ளார். மேலும் 5 ஆண்டுகளில் 13 ஆயிரத்து 343 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ள மத்திய பா.ஜ.க. அரசு நட​ப்பு நிதியாண்டில்  ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளதையும் ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார். நிதியமைச்சர் நேற்று இதுதொடர்பாக அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ள ப.சிதம்பரம் இந்த 500 மற்றும் 13,343 கோடி ரூபாய் ஒதுக்கீடு ஏற்கனவே இந்த திட்டங்களுக்கு பட்ஜெட்டில் அறிவித்ததை மீண்டும் அறிவித்தாரா ? அல்லது கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து உள்ளாரா ? என விளக்கம் அளிக்க வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

367 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

153 views

பிற செய்திகள்

"வெட்டுக்கிளி விவகாரம்: அரசு அலட்சியம் கூடாது" - ஸ்டாலின்

வெட்டுக்கிளி படையெடுப்பு விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

41 views

"பணிமனை ஊழியர்கள் பணிக்கு திரும்ப உத்தரவு" - தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

அரசு போக்குவரத்து கழக பணிமனையின் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள், பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

274 views

100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் - வீடுகளுக்கு சென்று வழங்க முதலமைச்சர் உத்தரவு

நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்களுக்கு, வீடுகளுக்கே சென்று சம்பளம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

16 views

நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர் - இலவசமாக சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு குவியும் பாராட்டு

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்த மருத்துவரான ஜியாவுர் ரகுமான் நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறார்.

154 views

சுருக்குவலை பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை - மீனவர்களுக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

மீன்பிடித் தடைக்காலம் நாளையுடன் முடிவடையும் நிலையில், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்தாலோ, 240 குதிரை திறனுக்கு அதிகமான திறன்கொண்ட இயந்திரங்கள் பொருத்திய விசைப்படகுகளை பயன்படுத்தினாலோ, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

20 views

சென்னையில் இருந்து ஈரோடு வந்த பெண்ணுக்கு கொரோனா - பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

சென்னையில் இருந்து விமானம் மூலம் ஈரோடு வந்த 35 வயதான பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.