சீனா, அமெரிக்கா இடையே நாளுக்கு நாள் அதிகரிக்கும் மோதல் - கானல் நீராகும் உலக பொருளாதார வளர்ச்சி...
பதிவு : மே 16, 2020, 01:07 PM
ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை, நம்ப முடியாத நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்க சீனா தயாராகி வருகிறது. இதனால் இருநாடுகளுக்கு இடையிலான மோதல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கொரோனா தொற்று உலகம் முழுவதும் இயற்கையாக பரவவில்லை என்றும், அது சீனாவால் செயற்கையாக உருவாக்கப்பட்டு, உலகம் முழுவதும் பரப்பட்டதாக சீனா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதில் சீனாவின் பங்கு உறுதியானால் கடும் விளைவுகளை அந்நாடு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என அதிபர் டிரம்ப் தொடர்ந்து எச்சரித்து வருகிறார். அமெரிக்காவின் உளவு நிறுவனங்களும் இது தொடர்பான தங்களது விசாரணையை தொடங்கி உள்ள நிலையில், சீனாவின் Huawei நிறுவனத்துக்கு semiconductors ஏற்றுமதி செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிபர் தடைவிதித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க சீனா தயாராகி வருகிறது. சீனாவில் உள்ள அமெரிக்க நிறுவனங்களான ஆப்பிள், சிஸ்கொ, Qualcomm நிறவனங்களுக்கு நிபந்தனைகளை விதிப்பதுடன்,  விசாரணை நடத்தவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க நிறுவனமான போயிங் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்குவதை நிறுத்தவும் சீனா முடிவு செய்துள்ளது. இருதரப்பு இடையிலான இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளால், உலக பொருளாதார வளர்ச்சி சீரடையும் என்பது கேள்விக்குறியாகி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

879 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

492 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

180 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

106 views

பிற செய்திகள்

போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ஃபிளாயிட்டுக்கு கொரோனா தொற்று

ஜார்ஜ் பிளாயிட் கொல்லப்படுவதற்கு முன்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

205 views

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் - தொடரும் போராட்டம்

அமெரிக்க போலீசால் கொல்லப்பட்ட, ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, வாஷிங்டன்னில் போராட்டம் நடைபெற்றது.

23 views

கொரோனா பரிசோதனை செய்ய ரோபோக்கள் - டென்மார்க் பல்கலைகழகம் வடிவமைப்பு

டென்மார்க்கில் உள்ள ஒரு பல்கலைகழகம் கொரோனா பரிசோதனை செய்யும் ரோபோக்களை வடிவமைத்துள்ளது.

10 views

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.

193 views

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை

இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை

48 views

அணில்களுக்கான சாகச சவால் விளையாட்டு : நாசா விஞ்ஞானியின் ஊரடங்கு குறும்பு

முன்னாள் நாசா விஞ்ஞானி ஒருவர் தனது தொழில்நுட்ப அறிவை எல்லாம் பயன்படுத்தி அணிகளுக்காக ஒரு சவால் விளையாட்டை உருவாக்கியிருக்கிறார்.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.