கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் சீனா தீவிரம்
பதிவு : மே 16, 2020, 11:54 AM
கொரோனா வைரஸூக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள சீனா, அதற்காக சுமார் 2 ஆயிரத்து 575 தன்னார்வலர்களை சோதனைக்கு உட்படுத்தி உள்ளது.
கொரோனா சிகிச்சைக்கு 5 வகையான தடுப்பூசிகளை சுமார் இரண்டாயிரம் பேருக்கு செலுத்தியுள்ள சீனா, முதல் கட்ட சோதனை முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்ட பரிசோதனை  ஜூலை மாத இறுதியில் நிறைவடையும் என்றும் இரண்டாம் கட்ட ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு உள்ள மனிதர்கள் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் தென்படவில்லை என்றும் கூறியுள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட மனிதர்களும் கொரோனா  பாதிப்பு அதிகமுள்ள மனிதர்களும் ஒரே இடத்தில் இருப்பது அவசியம் என்று சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு குறைவு என்பதால் மூன்றாம் கட்ட பரிசோதனையை
வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் பீஜிங் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தடுப்பூசி ஆராய்ச்சிக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ள சீனா, உரிய அனுமதி கிடைத்த பிறகு அவர்களும் தடுப்பூசி பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

416 views

பெல் தொழிற்சாலையை நம்பியுள்ள சிறு,குறு தொழில்கள் - ஊரடங்கால் வாழ்வாதாரம் கேள்விக்குறி

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காடு அருகே செயல்பட்டு வரும் மத்திய தொழில்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலையை மூலாதாரமாக கொண்டு, சிறு குறு தொழில்களான பெல் துணை தொழிற்கூடங்களில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

177 views

பிற செய்திகள்

கருப்பின நபரின் மரணத்திற்கு நியாயம் கோரி போராட்டம் : ராணுவம் தயார்நிலையில் இருக்க டிரம்ப் உத்தரவு

கருப்பின நபர் ஃப்ளோயிட் என்பவரின், மரணத்திற்கு நியாயம் வழங்க கோரி அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டம், 25 நகரங்களுக்கு பரவியது.

4 views

விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் : சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

10 views

பெல்ஜியம் இளவரசர் ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று

பெல்ஜியம் நாட்டின் இளவரசரும் அந்நாட்டு அரசரின் ஒன்று விட்ட சகோதரருமான ஜோவாசிம்மிற்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

15 views

ஆறுமுகன் தொண்டமான் உடலுக்கு இறுதிச்சடங்கு - ஏராளமான தமிழர்கள் பங்கேற்பு

அண்மையில் இலங்கையில் மரணம் அடைந்த அந்நாட்டு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிச் சடங்குகள் தற்போது நுவரெலியா நோர்வூட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

17 views

உலகிலேயே வயதான நபர் உயிரிழப்பு - கேன்சர் நோயால் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தகவல்

உலகிலேயே மிக வயதான நபராக கருதப்பட்ட 112 வயதான பாப் வெய்டன், உயிரிழந்தார்.

292 views

படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு - மசூதிகளை திறந்த சவுதி அரேபிய அரசு

கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிவாசல்கள் 2 மாத காலத்திற்கு பிறகு சவுதி அரேபியாவில் திறக்கப்பட்டுள்ளன.

80 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.