இளம்பெண் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் - பெண் வாக்குமூலம் அளிக்கும் காட்சியால் பரபரப்பு
பதிவு : மே 16, 2020, 07:45 AM
தூத்துக்குடி அருகே காதலன் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை மிரட்டியதால் தீ வைத்து தற்கொலைக்கு முயன்றதாக பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்ததை தொடர்ந்து விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் அதே ஊரை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

பெற்றோர் கண்டித்ததால் நாகலட்சுமி, தன் காதலன் சரவணகுமாரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த சரவணகுமார் தன் காதலியை செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். தன்னிடம் பேசவில்லை என்றால் விபரீதம் நடக்கும் என எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால் மன உளைச்சல் அடைந்த நாகலட்சுமி, கடந்த 9ஆம் தேதி தன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சரவணகுமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே மருத்துவமனையில் உள்ள நாகலட்சுமி அளித்த வாக்குமூல வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

சரவணகுமார் மற்றும் அவரது நண்பர்கள் தன்னை தொடர்ந்து மிரட்டி வந்ததாக வாக்குமூலத்தில் நாகலட்சுமி கூறியிருக்கிறார். பல்வேறு செல்போன் எண்களில் இருந்து அழைத்து ஆபாசமான முறையில் பேசி தன்னை துன்புறுத்தியதாகவும், போனை எடுக்காவிட்டால் தீ வைத்து கொளுத்தி விடுவதாக அவர்கள் மிரட்டியதாகவும் நாகலட்சுமி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

நாகலட்சுமியின் இந்த வாக்குமூலத்தால் போலீஸ் விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளதோடு, போனில் மிரட்டல் விடுத்த இளைஞர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

875 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

489 views

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

ஏழரை - (08.04.2020) : ராமாயணத்துல வருகிற அனுமன் மாதிரி மருந்து குடுத்து உதவுங்கோ மோடிஜி...........

443 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

178 views

சிறப்பு ரயிலில் பயணித்த இருவர் உயிரிழப்பு - உயிரிழப்பு குறித்து போலீஸ் விசாரணை

மும்பையில் இருந்து வாரணாசி சென்ற சிறப்பு ரயிலில் , உயிரிழந்த நிலையில் இருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

67 views

பிற செய்திகள்

தனியார் நிதி நிறுவனம் மூலம் கல்வி கடன்: தனியார் பள்ளிகள் சங்கத்தின் முயற்சிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தனியார் நிதி நிறுவனம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

0 views

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம்:"நாளை முதல் முன் பதிவு மையங்களில் வாங்கி கொள்ளலாம்" - தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறிவிப்பு

தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்திற்குட்பட்ட முன்பதிவு மையங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

2 views

கண்டெய்னர் லாரியில் சடலங்கள் என வதந்தி - மீனவ பெண்கள் திடீர் சாலை மறியல்

திருவொற்றியூர் பட்டினத்தார் சுடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து, மீனவ பெண்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

4 views

குறுகலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி - ரங்கநாதன் தெருவில் கிருமிநாசினி தெளிப்பு

சென்னையில் குறுகலான பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலமாக கிருமி நாசினி தடுக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

7 views

குடியாத்தம் நகராட்சியில் முதல் கொரோனா - தனியார் மருத்துவமனையின் மருந்தாளுநருக்கு தொற்று உறுதி

சென்னையில் வேலைபார்த்த மருந்தாளுநருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தாமாக முன்வந்து குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்​சைக்கு வந்துள்ளார்.

55 views

சாத்தூரில் முதல் கொரோனா பாதிப்பு - அரசு செவிலியர் உட்பட 4 பேருக்கு தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.