"10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அவசரம் ஏன்?" - திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு
பதிவு : மே 16, 2020, 07:39 AM
பத்தாம் வகுப்பு தேர்வை நடத்துவது, பள்ளிகளை அவசரமாக திறக்க முயற்சிப்பதும் தமிழக மாணவர்களை ஆபத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வழிகளாகும் என திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

* பள்ளிகளைத் திறப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளது அபாயத்தை ஏற்படுத்தும் செயலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

* இந்த குழுவில் பெற்றோர், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளையோ, கல்வியாளர்களையோ, பள்ளி மேலாண்மைக் குழு  உறுப்பினர்களையோ இடம் பெறச் செய்யாது பள்ளிக் கல்வித்துறையின் அதிகாரிகளையும், உயர்கல்விக் கூட தொழில்நுட்ப நிபுணர்களையும் மட்டுமே இடம்பெறச் செய்திருப்பது எந்த வகையில் நியாயம் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் 

* சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ஜுலை மாதத்தில் நடத்த உத்தேசித்திருக்கும் போது, தமிழ்நாட்டில் மட்டுமே அவசரம் அவசரமாகத் தேர்வுகளை ஜுன் முதல் நாளே துவக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது?
என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

* கொரோனா அச்சத்தில் உறைந்து கிடக்கும் மாணவர்கள் உளவியல் ரீதியாகத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மனநிலையில் இப்போது உள்ளார்களா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், 

* மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நல்ல சூழல் உருவாகும் போது தேர்வுகளை நடத்துவது குறித்தும் பள்ளிகளைத் திறப்பது குறித்தும் ஆலோசிக்கலாம் எனவும் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

879 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

492 views

இலங்கை அகதிகளுக்கு நடிகர் விஷால் உதவி - 350 குடும்பங்களுக்கு நிவாரண தொகுப்பை அனுப்பி வைத்தார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு நடிகர் விஷால் நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார்.

180 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

117 views

பிற செய்திகள்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 காவலர்கள் - 140 காவலர்கள், குணமாகி மீண்டும் பணிக்கு திரும்பினர்

சென்னை காவல் துறையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 401 பேரில் 140 பேர் குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

10 views

அரசுக்கு எதிராக போராடிய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் பணி நீக்கம்

தேனி மாவட்டத்தில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண் காவலராக தேர்வு செய்யப்பட்டு பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் பணி நீக்கம் செய்தார்.

100 views

சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்ட வழக்கு - உச்ச நீதிமன்றத்தில் 8 வழிச்சாலை திட்ட மேலாளர் மனு

சேலம் - சென்னை 8 வழிச் சாலை திட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை அவசர வழக்காக கருதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கக்கோரி 8 வழிச்சாலை திட்ட மேலாளர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

17 views

வீடுகளில் தனிமைபடுத்தும் வசதி ரத்தா? - சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் அளித்த பிரத்யேக தகவல்

வீட்டில் தனிமைபடுத்தப்படும் வசதி ரத்து செய்யப்படுவதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ண‌ன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

77 views

பிரதமரால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகள் - நேரில் அழைத்து கவுரவப்படுத்திய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மகளை, நேரில் அழைத்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கவுரவப்படுத்தியுள்ளார்.

7 views

"தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்" - பொதுத்தேர்வு பணி குறித்து இயக்குனர் அறிவிப்பு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் தொடக்கக்கல்வித் துறையை சேர்ந்த அனைத்து அலுவலர்களையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.