"மருத்துவ மேற்படிப்புகளில் மத்திய அரசு அநீதி" - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
பதிவு : மே 16, 2020, 07:36 AM
மருத்துவ மேற்படிப்புக்கான இடங்களில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு புறக்கணித்து, சமூக நீதி கொள்கைகளுக்கு துரோகம் இழைப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
* முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் பின்பற்ற மறுப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை சுட்டிக்காட்டி, மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

* மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளித்திருக்கும் 9 அயிரத்து 550 இடங்களில், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 2 ஆயிரத்து 578 இடங்கள் கிடைத்திருக்க வேண்டும் என்றும்,ஆனால் வெறும் 371 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

* அரசியல் சட்டத்திற்கு விரோதமாக அளிக்கப்பட்ட, 10 சதவீத இடஒதுக்கீடு உரிமை பெற்ற முன்னேறிய சமுதாய மாணவர்களுக்கு 653 இடங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக 
தெரிவித்துள்ளார்.

* பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான, 8 ஆயிரம்  இடங்களை கடந்த 3 ஆண்டுகளில் பா.ஜ.க. தட்டிப் பறித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

* இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டில் 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

* பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனில் அக்கறையுள்ள மாநில முதலமைச்சர்களும், பா.ஜ.க. தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு  அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

907 views

விலங்கு காட்சி சாலையாக மாறிய சர்க்கஸ் - கொரோனாவால் தொழிலே மாறிப் போச்சு...

உலகெங்கும் சர்க்கஸ் உள்ளிட்ட கேளிக்கை காட்சிகள் தடை செய்யப்பட்டிக்கும் நிலையில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த ஒரு சர்க்கஸ் நிறுவனம், இதற்கு ஒரு மாற்று வழியை கண்டுபிடித்திருக்கிறது.

519 views

"ஜூன் 8 முதல் பேருந்துகளை இயக்குங்கள்" - 4 ஆட்சியர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் கோரிக்கை

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 8 ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்க கல்வித்துறை அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

310 views

4 மாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த ரயில்வே பாதுகாப்பு படை வீரருக்கு பாராட்டு

போபால் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இந்தர் சிங் யாதவ், ரயிலில் இருந்த நான்கு மாத குழந்தைக்கு பால் வாங்கி வருகையில் ரயில் புறப்பட்டுள்ளது.

48 views

பிற செய்திகள்

முக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு

சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11 views

இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது

மதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.

14 views

உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.

11 views

கட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

கட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5 views

"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

187 views

சென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826

சென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.