10ம் வகுப்பு பொதுத்தேர்வு - புதிய முறையில் நடத்த முடிவு
பதிவு : மே 15, 2020, 11:55 PM
தமிழகத்தில்10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை, புதிய முறையில் நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 1 முதல் 12ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வை சுமூகமாக நடத்துவது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 3,000 தேர்வு மையங்களுக்கு மாற்றாக, தற்போது 10ஆம் வகுப்பு மாணவர்கள் படிக்கும்12 ஆயிரம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், தேர்வு மையங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. மேலும், தேர்வு அறைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக, 20 மாணவர்களுக்கு பதிலாக 10 பேரை, மட்டும் அமர வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதிகமான தேர்வு மையங்கள் அமைப்பதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை, தேர்வு பணியில் ஈடுபடுத்தப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. வெளியூர்களில் உள்ள ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, இ-பாஸ் வழங்கி, சொந்த ஊர்களுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கவும், தேவைப்படுவோருக்கு, பேருந்து வசதி ஏற்பாடு செய்யவும், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள மாணவர்களுக்கு, அவர்கள் வசிப்பிடத்திலேயே சிறப்பு மையத்தை ஏற்படுத்தி, தேர்வை நடத்தவும் உத்தரவிட்டப்பட்டது. மேலும், தேர்வை புதிய முறையில் சுமூகமாக நடத்தி முடிக்க, தேர்வுத்துறையும், பள்ளி கல்வித்துறையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11322 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

423 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

198 views

பிற செய்திகள்

முக கவசம் அணியாமல் சுற்றும் வாகன ஓட்டிகள் - இதுவரை 42,087 வழக்குகள் பதிவு

சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனங்களில் பயணித்தவர்கள் மீது 42 ஆயிரத்து 87 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

11 views

இளைஞர் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் - 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது

மதுரை விரகனூரில் மதன்ராஜ் என்ற இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுவன் உள்பட நான்கு பேர் கைது செயப்பட்டனர்.

14 views

உயிரிழந்த ராணுவ வீர‌ர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் மாவட்டம் எடப்பாடி வெத்தலைக்காரன்காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீர‌ர் மதியழகன், கடந்த 4 ஆம் தேதி ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது எதிரிகளால் தாக்கப்பட்டு வீர‌ மரணம் அடைந்தார்.

11 views

கட்டாய கடன் வசூல் - தனியார் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

கட்டாய கடன் வசூலில் ஈடுபடும் தனியர் நிதி நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

5 views

"அன்பழகன் விரைந்து நலம் அடைவார்" - தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

ஜெ.அன்பழகன் விரைந்து நலம் பெற்று வரும் நாளினை, எதிர்பார்த்து காத்திருப்பதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

187 views

சென்னையில் 1,116 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 19,826

சென்னையில் ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.