வேளாண் கட்டமைப்புக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு - மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
பதிவு : மே 15, 2020, 11:49 PM
வேளாண் கட்டமைப்புக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
சுயசார்பு திட்டத்தின் கீழ், 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார சீரமைப்பு திட்டங்கள் தொடர்பான 3ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகள் தொடர்பான 11 புதிய அறிவிப்புகள் அதில் இடம்பெற்றன. ஊரடங்கு காலத்தில் வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க 74 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். விவசாய உற்பத்தி பொருட்களை பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேளாண் கட்டமைப்புக்கு ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் தெரிவித்தார். சிறு - குறு உணவு உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாயும், மீனவர் நலனுக்காக 20 ஆயிரம் கோடி ரூபாயும் ஒதுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறினார். ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு விளைபயிரை மையமாக கொண்டு உணவு நிறுவன பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் மீன் ஏற்றுமதி மதிப்பை 1 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார். தமிழகத்தில் விளையும் மரவள்ளிக்கிழங்கை சர்வதேச அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கால்நடை நோய்கள் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 13 ஆயிரத்து 340 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் கால்நடைகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி அளிப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  மூலிகைப் பொருட்கள் உற்பத்திக்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்த அவர், அடுத்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை விவசாயம் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.  கால்நடை வளர்ப்பு கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக 14 ஆயிரம் கோடி ரூபாயும், தேனீ வளர்ப்பு திட்டங்களை ஊக்குவிக்க 500 கோடி ரூபாயும் ஒதுக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். விளை பொருட்களை விநியோகம் செய்வதில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு எடுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கு வழங்கி வந்த மானியம் இனி அனைத்து பயிர்களுக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தக தடையை நீக்கும் வகையில், வேளாண் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துதலில் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  

தொடர்புடைய செய்திகள்

எச்சில் பயன்படுத்தி பந்தை சுவிங் செய்ய மாட்டோம் - வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார்

தரம்சாலாவில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷவர் குமார், போட்டியில் எச்சில் பயன்படுத்தி பந்தை ஸ்விங் செய்யமாட்டோம் என கூறினார்.

704 views

மாநிலத்துக்குள் ரயில் இயக்கவும் தயார் - ரயில்வே

மாநில அரசுகள் விரும்பினால், மாநிலத்திற்கு உள்ளேயும் ரயில்களை இயக்க தயாராக இருப்பதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

184 views

"10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - அவசரம் வேண்டாம்": பள்ளிக்கல்வித்துறைக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்த வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

71 views

பிற செய்திகள்

"பாஜக ஆட்சியில் வரலாற்று சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது" - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது ஆட்சிக்காலத்தின் முதலாமாண்டில் ஏராளமான வரலாற்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா தெரிவித்துள்ளார்.

33 views

"வங்கிகள் இ.எம்.ஐ. பிடிப்பது தவறு : புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை" - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது எனவும், அதனை மீறி மாதத்தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

828 views

வெட்டுக்கிளி படையெடுப்பு - விமான துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

வெட்டுக்கிளி திரள் அதிகம் உள்ள இடங்களில் விமானம் பறக்கும் செயல்பாடுகளை குறைத்து கொள்ள வேண்டும் என விமானத்துறை அமைச்சகம் கேட்டுககொண்டுள்ளது.

272 views

"முன்கள பணியாளர்களுக்கு இசையால் பெருமை" - வெங்கையா நாயுடு பாராட்டு

இளையராஜாவின் பாரத பூமி பாடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.

10 views

ராணுவம் - தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை : சண்டை நீடிப்பதால் தொடர் பதற்றம்

காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

462 views

பாஜக 2.0 - மோடி அரசு ஒராண்டு நிறைவு :''மக்கள் அளித்த ஆதரவு வெற்றிக்கு காரணம்'' - கடிதத்தில் மோடி உருக்கம்

வரலாற்றில் முக்கிய முடிவுகளை எடுத்து இந்தியா கடந்த ஓராண்டில் வேகமான முன்னேற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.