போலீஸ் தொப்பியுடன் செல்பி போஸ் கொடுத்த காசி - சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் புகைப்படம்
பதிவு : மே 15, 2020, 03:22 PM
பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி , ஒரு இளம் பெண்ணின் மடியில் போலீஸ் தொப்பியோடு படுத்து செல்பிக்கு போஸ் கொடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாகர்கோயில் கணேசபுரத்தை சார்ந்த காசி, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டருகே உள்ள காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த காவல்துறை  அதிகாரியின் மகளையும் தனது வலையில் வீழ்த்தியபோது, வீட்டில் இருந்த போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை அறிந்த காவல்துறை அதிகாரி அவமானத்தால் இடமாற்றம் வாங்கி வேறு மாவட்டத்திற்கு குடிபெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்கள் மட்டுமின்றி திருமணமான பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் காசியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஐந்து பெண்கள் மட்டுமே காசி மீது புகார் அளித்துள்ளனர். மேலும் பல பெண்கள் புகார் அளிக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

பிற செய்திகள்

"ரயில் பயணம் - கொரோனா அறிகுறி இல்லாதவர்களுக்கு மட்டுமே அனுமதி"

தமிழகத்தில் இன்று முதல் 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்களின் இயக்கம் தொடங்கி உள்ளது.

25 views

புதிய பல்சர் பைக் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீசார் வலை : சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை

மதுரை மாவட்டம் மேலூர் பேங்க் ரோடு பகுதியில் வசித்த வந்த அருண் என்பவரது, புதிய பல்சர் பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

7 views

2 மாதங்களுக்கு பிறகு பணி - அரசுப் பேருந்து ஓட்டுனரின் டிக் டாக் வீடியோ

2 மாதங்களுக்கு பிறகு பணிக்கு திரும்பும் அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர், பேருந்தை ஆவலுடன் தேடி சென்று கண்டுப்பிடிப்பதை டிக்டாக் செய்துள்ளார்.

12 views

கொரோனா பாதிப்பிலும் அழியாத மனிதாபிமானம் - பிச்சைக்காரர் உடலுக்கு இறுதி சடங்கு செய்த மக்கள்

சென்னை போரூரில், சாலையோரம் இறந்து கிடந்த பிச்சைக்காரருக்கு அப்பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

186 views

வெளிநாட்டு நோயாளிக்கு நெருக்கடி அளிக்கும் மருத்துவமனை - ரூ.50 லட்சம் கேட்டு தொந்தரவு செய்வதாக புகார்

புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வெளிநாட்டை சேர்ந்தவர், 32 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்திய நிலையில், மேலும் 50 லட்ச ரூபாய் கேட்டு தொந்தரவு செய்வதாக மருத்துவமனை மீது புகார் அளித்துள்ளார்.

82 views

காரில் மதுபாட்டில்கள் கடத்தல் - 3 பேர் கைது

சென்னைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து மதுபானங்கள் எடுத்து வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

159 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.