சுயசார்பு திட்டத்தின் 2 ஆம் கட்ட புதிய அறிவிப்புகள்
பதிவு : மே 14, 2020, 08:59 PM
பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டமான 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டத்தின், 2 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்
பிரதமர் மோடி அறிவித்த  சுயசார்பு திட்டமான 20 லட்சம் கோடி ரூபாய்  மதிப்பிலான சிறப்பு திட்டத்தின், 2 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்

* சுமார் 3 கோடி விவசாயிகளுக்கு , 4.22 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும்,  கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் புதிய கிசான் கிரெடிட் கார்டு வழங்கி 25 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி தரப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

* விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் கடனை திருப்பி செலுத்த கால அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப் படுவதாகவும், கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30 தேதி வரை 86 ஆயிரம் கோடி அளவுக்கு 63 லட்சம் கடன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார் 

* சிறு விவசாயிகள் பெற்ற கடனுக்கான வட்டி மே 31 வரை தள்ளுபடி செய்யப்படுவதாகவும் , நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 29 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும்  நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

* விவசாய கொள்முதலுக்காக 6ஆயிரத்து 700 கோடி ரூபாயும் , மாநில பேரிடர் நிவாரண நிதியாக 11 ஆயிரம் கோடி ரூபாயும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறினார் 

* புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, அவர்கள் கிராமங்களிலேயே வேலைவாய்ப்பு வழங்க 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்களுக்கு இரண்டு மாதங்கள் இலவச அரிசி  அல்லது கோதுமை வழங்க  3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  தெரிவித்தார்.

* ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் அடுத்த ஆண்டு மார்ச் மாத த்திற்குள் 23 மாநிலங்களில் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார் . 

* தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை குடியமர்த்த குடியிருப்புகளை கட்ட அரசு ஊக்கத்தொகை வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார் 

* சிறு வணிகர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் 1.62 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் எனவும் கடனை முறையாக செலுத்தும் சிறு வணிகர்களுக்கு 2 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் கூறியுள்ளார்.

* 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான முத்ரா கடன்களுக்கு 2 சதவீதம் வட்டி குறைக்கப்படுவதாகவும் , இதன் மூலம் 3 கோடி சிறு வணிகர்கள் பயன்பெறுவார்கள் என்றும் நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

* சாலையோர  வியாபாரிகளுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதி உதவியாக தலா ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்படும் என்றும் அவர்  அறிவித்தார் 

* நகரங்களில் உள்ள பயன்படாத அரசு கட்டிடங்கள் , அரசு - தனியார் பங்களிப்புடன் , புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மலிவு வாடகை குடியிருப்புகளாக மாற்றப்படும் என்று மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

* கிசான் கார்ட் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு அதில் மீனவர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களை சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

தனியார் நிதி நிறுவனம் மூலம் கல்வி கடன்: தனியார் பள்ளிகள் சங்கத்தின் முயற்சிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தனியார் நிதி நிறுவனம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

3 views

செம்மொழி தமிழாய்வு இயக்குநர் நியமனம்: ரஜினி பாராட்டுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதில்

தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நடிகர் ரஜினியின் பாராட்டுக்கு மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் பதிலளித்துள்ளார்.

15 views

ஊரடங்கு உத்தரவால் ரூ.17,000 கோடி வருவாய் இழப்பு - அமைச்சர் கே.சி. வீரமணி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடந்த நிகழ்வில், கொரோனா சிறப்பு கடன் உதவி திட்டத்தின் கீழ் கடனுதவிகளை அமைச்சர் கே.சி.வீரமணி வழங்கினார்.

148 views

கருணாநிதி பிறந்த நாள் விழா : நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உதயநிதி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி 97வது பிறந்த நாளை முன்னிட்டு அகட்சியின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழகினார்.

34 views

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

36 views

தமிழக தலைமைச்செயலாளர் பதவி காலம் நீட்டிப்பு - மேலும், 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி காலத்தை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

82 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.