கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உலக நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தியுள்ளன.
பதிவு : மே 14, 2020, 08:50 PM
கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உலக நாடுகள் ஊரடங்கில் தளர்வுகளை அமல்படுத்தியுள்ளன. தளர்வுகளுக்கு பின்பு உலக நாடுகளின் பாதிப்பு நிலவரம்.
உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி , உலகளவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 44 லட்சத்தை கடந்துள்ளது. 16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில் , உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. அதிக பாதிப்புக்குள்ளான நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. உயிரிழப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்துள்ளதால் சுகாதாரத் துறை அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.


இங்கிலாந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் , அந்நாட்டில் 33 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஊரடங்கால் அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் கடந்த 5 நாட்களாக 200க்கும் குறைவான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. புதிய பாதிப்பு சதவீதம் மற்றும் உயிரிழப்பு சதவீதம் குறைந்துள்ளதால் அந்நாட்டில் தளர்வுகள் படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. பிரான்ஸ் நாட்டில் கடந்த 13ம் தேதி அன்று 83 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறைவான எண்ணிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு சதவீதம் அதிகரித்தால் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் என அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
ரஷ்யாவில் கடந்த 11 நாட்களாக தினம்தோறும் 10 ஆயிரம் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்படுகிறது. இதனால் ரஷ்யா கொரோனா பாதிப்பு நாடுகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது
இந்தியா கொரோனா பாதிப்பு பட்டியலில் 12வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

பிற செய்திகள்

லாக்ஸ் உலக கோப்பை பனிசறுக்கு தொடர் - ஆண்கள் பிரிவில் 2-வது பட்டம் வென்றார் மேட்ஸ்

சுவிட்சர்லாந்தில் நடந்த லாக்ஸ் உலக கோப்பை பனி சறுக்கு விளையாட்டில் முன்னணி வீரர் மேட்ஸ்சன் பட்டம் வென்றார்.

1 views

கொட்டி வரும் பனி பொழிவு - படையெடுத்த சுற்றுலா பயணிகள்

துருக்கியில் கொட்டி வரும் பனியில் சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாடி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

6 views

மருத்துவமனையில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை - 6 கி.மீ தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் பனியில் சிக்கிய தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை ராணுவத்தினர் தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர்.

5 views

நவால்னி கைதுக்கு எதிர்ப்பு - ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் ரஷ்யாவின் முக்கிய பகுதிகள் கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.

7 views

உயிருக்குப் போராடும் காதலர்கள் - இருமனம் இணைந்த உருக்கமான நிகழ்வு

பிரிட்டனில் கொரோனா தீவிர சிகிச்சையில் இருக்கும் காதலர்கள், திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

7 views

நமஸ்கார்...பிரதமர் மோடி... - பிரேசில் அதிபர் ட்விட்டர் பதிவு

கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.