நரேந்திர மோடி அரசுக்கு விஜய் மல்லையா திடீர் பாராட்டு
பதிவு : மே 14, 2020, 12:54 PM
மத்திய பா.ஜ.க அரசுக்கு விஜய் மல்லையா திடீர் பாராட்டு தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் 100 சதவீதம் கடனை திருப்பிச் செலுத்த தாம் தயாராக உள்ள நிலையில், அதனை ஏற்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரணத் தொகுப்பை அறிவித்த மத்திய  அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள விஜய்மல்லையா, தான் வங்கிகளில் வாங்கியுள்ள உள்ள கடனை 100 சதவீதம் திருப்பித் தர தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த தொகையை பெற்றுக் கொண்டு மத்திய அரசு, தம்மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என தமது பதிவில் கோரியுள்ளார்.   தம்மை போன்றவர்கள் திருப்பிச் செலுத்த நினைக்கும் கடன் தொகையை மத்திய அரசு தொடர்ந்து வாங்க மறுத்து வருவது ஏன் என்றும் விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். நிபந்தனையில்லாமல் பணத்தை பெற்றுக் கொண்டு, தம்மீதான வழக்கை முடிக்க வேண்டும் எனவும் மல்லையா கோரியுள்ளார். 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை ஏய்ப்பு புகாரில் சிக்கிய மல்லயா தற்போது இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

சீனா, இந்தியா இடையே போர் மூளும் அபாயம் - இந்திய எல்லையில் படைகளை குவித்து வரும் சீனா

இந்தியா, சீனா இடையே போர் மூளும் சூழல் உருவாகியுள்ளது.

11309 views

முக கவசம் அணிந்தால் மட்டுமே அனுமதி என்றதால் ஆத்திரம் - பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல்

மங்களூருவில் முக கவசம் அணிய வற்புறுத்திய பல்பொருள் அங்காடி ஊழியர் மீது தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

418 views

கிரீஸில் இருந்து ஜப்பான் வந்தது ஒலிம்பிக் ஜோதி - ஒலிம்பிக் போட்டி நடத்த ஜப்பான் அரசு நடவடிக்கை

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே கிரீஸ் நாட்டில் இருந்து ஒலிம்பிக் ஜோதி ஜப்பான் கொண்டு வரப்பட்டது.

197 views

பிற செய்திகள்

கருப்பின நபர் கொல்லப்பட்ட விவகாரம் : காந்தி சிலை அவமதிப்பு - இந்தியாவிடம் மன்னிப்பு கோரிய அமெரிக்கா

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் அருகே உள்ள மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி அவமதித்துள்ளனர்.

254 views

ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.

12 views

குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கும் விவகாரம் : மத்திய அரசு, துணை நிலை ஆளுநருக்கு நோட்டீஸ்

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதங்களுக்கு அரிசியாகவே வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

26 views

குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியை

கேரளாவில் குட்டி கதைகளை சொல்லி ஆன்லைனில் பாடம் நடத்தி வரும் ஆசிரியையின் பணிக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

39 views

நிசர்கா புயல் கடந்ததன் எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை

நிசர்கா புயல் மும்பையில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

9 views

"மக்களின் அச்சத்தை போக்க பிரதமர் பேச வேண்டும்" - ராகுல்காந்தி உடனான கலந்துரையாடல் போது ராஜீவ் பஜாஜ் கருத்து

கொரோனா தொற்று என்றாலே மரணம் தான் என்ற அச்சம் மக்களிடையே இன்றும் தொடர்வதாகவும், இதனை மாற்றுவது மிகவும் கடினமான பணி என்று ராகுல்காந்தி உடனான விவாதத்தின் போது ராஜீவ் பஜாஜ் தெரிவித்துள்ளார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.