கையேந்தி நிற்கும் உலகின் மிக உயரமான கட்டிடம் - வெளிப்புற விளக்குகள் அனைத்தும் விற்பனை..?
பதிவு : மே 13, 2020, 10:18 AM
உலகின் மிக உயரமான கட்டிடம் என்ற பெருமைக்குரிய புர்ஜ் கலிஃபா, தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது மக்களிடம் கையேந்தி தானம் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
* உலகின் மிக பணக்கார நாடுகளில் ஒன்றாக எப்போதும் மதிக்கப்படுவது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். அந்த நாட்டின் செல்வச் செழிப்புக்கு அத்தாட்சியாய் விளங்குவது துபாய் நகரம்.

* துபாய் நகரத்துக்கே பெருமை என்றால் அது உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாதான். 

* இதன் உயரம் 828 மீட்டர். விமானத்தில் இருந்து குதிப்பது போல இந்த கட்டடத்தின் உச்சியில் இருந்து குதித்து சாகசம் எல்லாம் செய்வார்கள். அந்த அளவுக்கு இது உயரமானது.

* இத்தனை பெருமைகள் கொண்ட இந்தக் கட்டிடம், உலகின் மிக உயரமான தானம் கேட்கும் பெட்டி... அதாவது Worlds Tallest Donation Box என்ற நிலைக்கு சமீபத்தில் தள்ளப்பட்டிருக்கிறது. 

* கொரோனா வைரஸ்தாக்குதல் துபாய் நகரத்தை தலைகீழாக மாற்றிப் போட்டதன் விளைவுதான் இது. உலகின் மிகப் பணக்கார நகரமான துபாயில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் எக்கச்சக்கம் இருக்கிறார்கள். 

* ஊரடங்கால் வேலை இழந்த அவர்கள், பசியிலும் பஞ்சத்திலும் தவிக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் புர்ஜ் கலிபா ஒரு டொனேஷன் பாக்ஸாக மாற்றப்பட்டிருக்கிறது. 

* இந்தக் கட்டிடத்தின் வெளிப்புரத்தில் சுமார் 12 லட்சம் அலங்கார மின் விளக்குகள் உள்ளன. ஒரு விளக்கு சுமார் 200 ரூபாய் என்ற விகிதத்தில் இந்த விளக்குகள் அனைத்தும் விற்கப்படும் என அறிவிப்பு வெளியானது. உடனே உலகெங்கும் இருந்து பல பேர் இணையம் மூலமாக அத்தனை விளக்கையும் வாங்கிவிட்டார்கள். 

* இந்தப் பணத்தின் மூலம் 12 லட்சம் பேருக்கு ஒரு நாள் உணவு வழங்க முடியும் என துபாய் நகர அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். விளக்குகள் விற்கப்பட்டாலும் அவற்றை கழற்றி எடுத்துவிட மாட்டார்கள் விற்பனை என்பது ஒரு அடையாளத்துக்குத்தான். 

* பணம் போட்டு வாங்கியவர்களின் சார்பில் இந்த உயரமான கட்டிடத்தின் விளக்குகள் வழக்கம் போல ஒளி வீசிக் கொண்டிருக்கும். 

* இப்படியொரு நல்ல காரியத்தை செய்ததன் மூலமாக உலக மக்கள் நெஞ்சில் புர்ஜ் கலிஃபா, இன்னும் கொஞ்சம் உயரமாக நிமிர்ந்து நிற்கிறது.


தொடர்புடைய செய்திகள்

கர்நாடக அரசாணைக்கு தடை விதித்து உத்தரவு - 61 கிரிமினல் வழக்குகள் திரும்ப பெற கோரி அரசாணை

கர்நாடகாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மீதான 61 கிரிமினல் வழக்குகளை திரும்ப பெறும் அரசாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

280 views

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

152 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

105 views

பிற செய்திகள்

லாக்ஸ் உலக கோப்பை பனிசறுக்கு தொடர் - ஆண்கள் பிரிவில் 2-வது பட்டம் வென்றார் மேட்ஸ்

சுவிட்சர்லாந்தில் நடந்த லாக்ஸ் உலக கோப்பை பனி சறுக்கு விளையாட்டில் முன்னணி வீரர் மேட்ஸ்சன் பட்டம் வென்றார்.

6 views

கொட்டி வரும் பனி பொழிவு - படையெடுத்த சுற்றுலா பயணிகள்

துருக்கியில் கொட்டி வரும் பனியில் சுற்றுலா பயணிகள் பனி சறுக்கு விளையாடி மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

6 views

மருத்துவமனையில் சிக்கிய தாய் மற்றும் குழந்தை - 6 கி.மீ தோளில் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் பனியில் சிக்கிய தாய் மற்றும் பச்சிளம் குழந்தையை ராணுவத்தினர் தோளில் சுமந்து சென்று அவர்களது வீட்டில் பத்திரமாக விட்டனர்.

6 views

நவால்னி கைதுக்கு எதிர்ப்பு - ஆதரவாளர்கள் தொடர் போராட்டம்

ரஷ்ய எதிர்கட்சி தலைவர் நவால்னி கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தால் ரஷ்யாவின் முக்கிய பகுதிகள் கலவர பூமியாக காட்சி அளிக்கிறது.

7 views

உயிருக்குப் போராடும் காதலர்கள் - இருமனம் இணைந்த உருக்கமான நிகழ்வு

பிரிட்டனில் கொரோனா தீவிர சிகிச்சையில் இருக்கும் காதலர்கள், திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

7 views

நமஸ்கார்...பிரதமர் மோடி... - பிரேசில் அதிபர் ட்விட்டர் பதிவு

கொரோனா தடுப்பூசி வழங்கியதற்காக, பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.