"சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
பதிவு : மே 13, 2020, 09:00 AM
கொரோனா தொற்று கட்டுப்படுத்தும் வரை சென்னைக்கு ரயில்களை இயக்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏற்கனவே 31ஆம் தேதி வரை ரயில்களை சென்னைக்கு அனுப்ப வேண்டாம் என கேட்டு கொண்ட நிலையில்,

* முன்பதிவு செய்யப்பட்ட காரணத்தால், வரும் 14ஆம் தேதி மற்றும் 16ஆம் தேதி ரயில் சேவை இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்தது. * டெல்லியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் குளிர்சாதன வசதி கொண்ட ராஜ்தானி ரயில் பெட்டிகளில் சுமார் ஆயிரத்து 100 பயணிகள் பயணம் செய்வர் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி,சென்னைக்கு வரும் பயணிகளை பி.சி.ஆர். பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுப்ப முடியும் என்பதால், அனைவரையும் ஒரே நேரத்தில் பரிசோதனை செய்வதில் நடைமுறை சிரமம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார் * எனவே, அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்தி வைக்க ரயில்வே துறை மூலமே நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார்

பிற செய்திகள்

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

35 views

நேதாஜி வாழ்க்கை இன்றும் உத்வேகம் அளிக்கிறது - பிரதமர் மோடி

நேதாஜி சுபாஷ் சந்திர போசின் வாழ்க்கை இன்றும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிக்கிறது என பிரதமர் மோடி கூறினார்.

4 views

அதிமுக ,பாஜக விபரீத கூட்டணி - முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேச்சு

அ.தி.மு.க - பா.ஜ.க விபரீத கூட்டணி என்று முன்னாள் மத்தியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

55 views

பேரறிவாளனோடு மற்றவர்களும் விடுதலை - தொல்.திருமாவளவன் பேச்சு

பேரறிவாளனோடு மற்றவர்களையும் ஆளுநர் விடுதலை செய்ய வேண்டும் என்றும், காலம் தாழ்த்தாமல் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

11 views

தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரம் - பாஜக தலைவர் எல்.முருகன் கண்டனம்

தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இலங்கை கடற்படையை வன்மையாக கண்டிப்பதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்

15 views

இலங்கை கடற்படையினரை கைது செய்க - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் இத்தாலிய வீரர்களை போல சிங்கள கடற்படை வீரர்களையும் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.